BSNL, Airtel, Jio, Vi Prepaid Plans Tamil News : பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாநிலங்களுக்கு ரூ.365 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய திட்டம், 365 நாட்கள் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகள் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள், 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் வருகிறது. இருப்பினும், இந்த இலவசங்கள் 60 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். 60 நாட்கள் இலவச காலம் முடிந்ததும் வாய்ஸ் மற்றும் டேட்டா வவுச்சர்கள் தேவைப்படும்.
தற்போது, கேரள இணையதளத்தில் மட்டுமே இந்த ரீசார்ஜ் திட்டம் நேரலையில் உள்ளது. ஆனால், ஆந்திரா, அசாம், பீகார்-ஜார்க்கண்ட், குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, கொல்கத்தா- மேற்கு வங்கம், வடக்கு- கிழக்கு, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் - சத்தீஸ்கர், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு - சென்னை, உ.பி.-கிழக்கு, மற்றும் உ.பி.-மேற்கு ஆகிய மாநிலங்களில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
ஒரு நாளுக்கு இலவச வாய்ஸ் அழைப்பு வரம்பை அடைந்ததும், அடிப்படை திட்டக் கட்டணத்தின்படி கட்டணங்கள் பொருந்தும். இதேபோல், 2 ஜிபி தினசரி டேட்டா மீறியதும், அதன் வேகம் 80kbps வரை குறையும். மேலும், அதன் கீழ் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் இலவச தனிப்பயனாக்கப்பட்ட ரிங் பேக் டோன் (பிஆர்பிடி) உடன் அனுப்பலாம்.
முதலில், ரூ.365 ப்ரீபெய்ட் திட்டம் நம்பிக்கைக்குரியதாகத் தோன்றுகிறது. ஆனால், 60 நாள் விதிமுறை பலருக்கு ஈர்க்காமல் போகலாம். சத்தீஸ்கரைப் பொறுத்தவரை, பி.எஸ்.என்.எல் ரூ.2,399 திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. இதன் கீழ் பயனர்கள் 100 எஸ்.எம்.எஸ் உடன் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகளைப் பெறுவார்கள். இருப்பினும், இந்தத் திட்டத்துடன் எந்த டேட்டா சலுகையும் வழங்கப்படவில்லை. இந்தத் திட்டம், டேட்டா பயன்படுத்தத் தேவையில்லாத அல்லது அழைப்பதற்கு இரண்டாம் நிலை தொலைபேசியை விரும்புவோருக்கானது.
பிற நெட்வொர்க் ஆபரேட்டர்களிடமிருந்து கிட்டத்தட்ட அல்லது ஒரு வருட கால செல்லுபடியாகும் சலுகைகள் உள்ளன.
# Vi, ரூ.1,499 ப்ரீபெய்ட் திட்டத்தை 365 நாட்கள் செல்லுபடியாகும் சலுகையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ், பயனர்கள் 24 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் டாக்டைம், 3,600 எஸ்எம்எஸ் மற்றும் Vi திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான அணுகலைப் பெறுவார்கள். ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ.2,399 திட்டம் அல்லது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ.2,595 திட்டம் மற்றும் ஜீ 5-க்கு சந்தா போன்ற பிற திட்டங்களும் உள்ளன.
# Vi போன்ற வருடாந்திர திட்டத்தை ஏர்டெலும் கொண்டுள்ளது. ரூ.1,498 விலையில் பயனருக்கு 24 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 3,600 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. கூடுதலாக, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், விங்க் மியூசிக், ரூ.150 கேஷ்பேக் ஃபாஸ்டேக், இலவச ஹலோ ட்யூன்கள் மற்றும் அப்ஸ்கில் மற்றும் ஷா அகாடமிக்கு ஒரு வருட சந்தாவையும் கொடுக்கிறது. ரூ.2,498 திட்டம், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, ரூ.2,698 திட்டம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபிக்கு சந்தாவை வழங்குகிறது.
# ஜியோவின் ரூ.1,299 திட்டம் செல்லுபடியாகும் காலம் ஒரு மாதத்திற்கும் குறைவு. ஏனெனில், இது 336 நாட்களுக்குச் செல்லுபடியாகும். 24 ஜிபி டேட்டா, ஜியோவிலிருந்து ஜியோ நெட்வொர்க்குகளுக்கு அன்லிமிடெட் அழைப்புகள், 3,600 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான காம்ப்ளிமென்டரி சந்தா ஆகியவற்றை வழங்குகிறது. மேலும், இது ஜியோவிலிருந்து 12,000 நிமிடங்களுக்கு ஜியோவிலிருந்து ஜியோ அல்லாத எஃப்யூபியை வழங்குகிறது. ரூ.2,399 திட்டத்தின் கீழ், பயனர்கள் ஒரு நாளைக்கு 2 ஜிபி வரம்புடன் 730 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். ரூ.2,599 திட்டம் ஆண்டுதோறும் கூடுதலாக 10 ஜிபி டேட்டாவையும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியின் சந்தாவையும் வழங்குகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.