BSNL Rs 398 prepaid Plans Tamil News : பாரத் நிகம் சஞ்சார் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஒரு புதிய ப்ரீபெய்ட் வவுச்சர் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது அன்லிமிடெட் அழைப்பு நன்மைகளையும் உண்மையிலேயே அன்லிமிடெட் அதிவேக டேட்டாவையும் அதன் பயனர்களுக்கு வழங்குகிறது. ரூ.398 செலவில் இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம், உண்மையிலேயே அன்லிமிடெட் டேட்டாவை வழங்குவதுதான். அதாவது பயனர்கள் எந்தவொரு நியாயமான பயன்பாட்டுக் கொள்கையில் (எஃப்யூபி) கட்டுப்பாடுகள் இல்லாமல் அதிவேக இணைய டேட்டாவை அணுக முடியும்.
பயனர்கள் தங்கள் டேட்டா வரம்புகளைத் தீர்த்துவிடுவதைப் பற்றிக் கவலைப்படாமல் அன்லிமிடெட் அளவு அதிவேக இணையத் தரவை பதிவிறக்கம் / பதிவேற்றம் மற்றும் பிரவுஸ் செய்ய முடியும் என்பதை இந்த திட்டம் உறுதி செய்யும். இந்த நடவடிக்கை, அரசு நடத்தும் தொலைத் தொடர்பு நிறுவனத்தால் வழங்குபடுவது இதுவே முதல் முறை. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட பிற முக்கிய தொலைத் தொடர்பு போட்டியாளர்கள் யாரும் இந்த வகையான எந்தவொரு திட்டத்தையும் வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
பல்வேறு செய்திக் கட்டுரைகளில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின்படி, இந்தத் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம், 30 நாட்கள் வரை நீடிக்கும். இந்தக் காலகட்டத்தில் அன்லிமிடெட் இணைய டேட்டாக்களை, நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற பதிவிறக்கங்கள் மற்றும் பதிவேற்றங்களை வழங்குகிறது. மார்க்கெட்டில் உள்ள மற்ற திட்டங்களைப் போலவே, இலவச அழைப்பு சலுகைகள் மற்றும் உண்மையிலேயே அன்லிமிடெட் டேட்டா ஆகியவற்றுடன் கூடுதலாக இந்தத் திட்டமும் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்.களை வழங்குகிறது.
மற்ற மாநில அதிகார வரம்புகளில் பயனர்கள் வெளியே சென்றாலும் இந்த திட்டம் அதன் அனைத்து வசதிகளுடன் செயலில் இருக்கும். இருப்பினும், சர்வதேச எண்களில் அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்புவதற்கான எந்தவொரு வசதியையும் இந்த திட்டம் வழங்காது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"