/tamil-ie/media/media_files/uploads/2019/07/bsnl-3.jpg)
BSNL SIM card replacement cost
BSNL SIM card replacement cost : பி.எஸ்.என்.எல் சிம் கார்டுகளை மாற்றம் செய்ய ஆகஸ்ட் மாதம் வாங்கிய அதே கட்டணத்தைத் தான் தற்போதும் தங்களின் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறுகிறது. பல்வேறு தனியார் நிறுவனங்களின் பலத்த போட்டியை சந்தித்து வரும் பி.எஸ்.என்.எக் நிறுவனம் தங்களால் முடிந்த டஃப் காம்பெட்டிசனை கொடுத்து வருகிறது.
இருப்பினும் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் சிம் கார்ட்களை மாற்ற ரூ. 50ஐ கட்டணமாக வசூலித்து வருகிறது. ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் ரூ.30-ஐ கட்டணமாக வசூலித்து வருகிறது. ஆனால் ஜியோ நிறுவனமோ தங்களின் வாடிக்கையாளர்களிடம் இருந்து இந்த சேவைக்கு கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் இதற்கு முன்பு ரூ. 100-ஐ கட்டணமாக சிம் ரீப்ளேஸ்மெண்ட் கட்டணமாக வசூலித்து வந்தது. ஆனால் ஆகஸ்ட் மாதம் அந்த கட்டணத்தை பாதியாக குறைத்து ரூ.50க்கு விற்பனை செய்ய துவங்கியது. தற்போது அந்த விலையில் எந்த விதம மாற்றமும் இன்றி தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பி.எஸ்.என்.எல் ஜியோவுக்கு நிகராக பல்வேறு புதிய ஆஃபர்களை வழங்க திட்டமிட்டு வருகிறது. சிம் கார்ட்களுக்கான கட்டணங்களை குறைத்தால் நிச்சயமாக பி.எஸ்.என்.எல் 4ஜி சேவைக்காக நிறைய வாடிக்கையாளர்கள் இந்த நெட்வொர்க்கை பயன்படுத்துவார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
மேலும் படிக்க : ரூ. 12 ஆயிரத்துக்குள் ஸ்மார்ட்போன் வாங்கனுமா? உங்களுக்கான பட்டியல் இதோ!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.