BSNL Unlimited yearly plans : ஜியோவைப் போலவே ஒரு வருடத்திற்கான புதிய பிளான்களை அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல். ஒரு வருடத்திற்கான அன்லிமிட்டட் வாய்ஸ் கால்களுக்கான புதிய டேரிஃபை அறிமுகம் செய்துள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம்.
1312 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால் வருடம் முழுவதும் (365 நாட்கள் வேலிடிட்டி) அன்லிமிட்டட் ஃப்ரீ கால்கள் பேசிக் கொள்ளலாம். வருடத்திற்கு 1000 மெசேஜ்களை இலவசமாக அனுப்ப இயலும். ஆனாலும் இதன் டேட்டாவானது வெறும் 5ஜிபி மட்டுமே.
முழுக்க முழுக்க போன் கால்கள் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் குறிப்பாக அலுவலகத் தேவைகளிற்காக இந்த ஆஃபரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த சலுகைகளை ப்பெற்று பயன்படுத்த முடியும்.
இந்த பேக்கை பயன்படுத்தும் நபர்களால் ஃபுல் டாக்டைம் ஆபர்களை பயன்படுத்த இயலாது. அதே போல் மும்பை மற்றும் டெல்லி வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு அழைக்கும் போது இலவச கால்களாக இருக்காது. அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
5ஜிபி டேட்டா தீர்ந்து விட்டால், ஆட் ஆன் பேக்கேஜ்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
BSNL Unlimited yearly plans - இதர வருடாந்திர சேவைகள்
ரூ. 1,699 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் வருடம் முழுவதும் அன்லிமிட்டட் போன் கால்கள் பேசிக் கொள்ளலாம்.
அன்லிமிட்டட் மெசேஜ்கள் அனுப்பிக் கொள்ளலாம். நாள் ஒன்றிற்கு 100 மெசேஜ்கள்.
365 நாட்கள் வேலிடிட்டி
1536 ஜிபி டேட்டா (நாள் ஒன்றிற்கு 4.21 ஜிபி டேட்டா )
ரூ.2,099 பேக்
ரூ. 2099 -க்கு ரீசார்ஜ் செய்தால் வருடம் முழுவதும் அன்லிமிட்டட் போன் கால்கள் பேசிக் கொள்ளலாம்.
அன்லிமிட்டட் மெசேஜ்கள் அனுப்பிக் கொள்ளலாம். நாள் ஒன்றிற்கு 100 மெசேஜ்கள்.
365 நாட்கள் வேலிடிட்டி
2266 ஜிபி டேட்டா (நாள் ஒன்றிற்கு 6.21 ஜிபி டேட்டா )
மேலும் படிக்க : சாம்சங்கின் எஸ் 10 பிப்ரவரியில் அறிமுகம்