ஒரு நாளைக்கு வெறும் 7 ரூபாய்... 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்: பி.எஸ்.என்.எல். அட்டகாசமான ரீசார்ஜ் பேக்!

மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நாளொன்றுக்கு 1.50 GB டேட்டாவை கொடுக்கும் விலையில் பி.எஸ்.என்.எல். 3 GB டேட்டாவை கொடுக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி எஸ்.எம்.எஸ். போன்ற சலுகைகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நாளொன்றுக்கு 1.50 GB டேட்டாவை கொடுக்கும் விலையில் பி.எஸ்.என்.எல். 3 GB டேட்டாவை கொடுக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி எஸ்.எம்.எஸ். போன்ற சலுகைகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
bsnl

ஒரு நாளைக்கு வெறும் 7 ரூபாய்... 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்: பி.எஸ்.என்.எல். அட்டகாசமான ரீசார்ஜ் பேக்!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (VI) நிறுவனங்கள் கொடுக்க முடியாத விலையையும் சலுகையையும் பி.எஸ்.என்.எல். (BSNL) நிறுவனம் அதிரடியாக ஆஃபரில் கொடுக்கிறது. மற்ற நிறுவனங்கள் நாளொன்றுக்கு 1.50 GB டேட்டாவை கொடுக்கும் விலையில் பி.எஸ்.என்.எல். 3 GB டேட்டாவை கொடுக்கிறது. இதுபோக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி எஸ்.எம்.எஸ். (Daily SMS) மற்றும் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகைகளையும் கொடுக்கிறது. 

Advertisment

வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் 3 மாத பிளானை பி.எஸ்.என்.எல். வழங்குகிறது. தினசரி 3 GB டேட்டா என 3 மாதங்களுக்கு மொத்தமாக 252 GB அதிவேக டேட்டா வழங்கும் இந்த திட்டம் வெறும் ரூ.599க்கு கிடைக்கிறது. அதாவது சராசரியாக வெறும் 7 ரூபாய் விலையில் தினசரி 3 GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவைகளை அனுபவிக்கலாம்.

Advertisment
Advertisements

இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது 4ஜி சேவையை நாடு முழுவதும் வழங்கத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் ஏராளமான டவர்களையும் அமைத்து வருகிறது பி.எஸ்.என்.எல்.

கடந்தாண்டு தனியார் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய நிலையில், ஏராளமான வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். நெட்வொர்கிற்கு மாறினர். இந்நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் பல்வேறு விலைகளில், வாடிக்கையாளர்களின் வசதிகளுக்கு ஏற்ப பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்தவகையில் 3 மாத வேலிடிட்டி கொண்ட பிளான் வெறும் ரூ.599-க்கு கிடைக்கிறது. தினசரி அதிக டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இந்த ரீசார்ஜ் திட்டம் உள்ளது.

பி.எஸ்.என்.எல். வழங்கும் 599 ரூபாய்க்கான ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிட்டட் அழைப்புகள் மட்டுமின்றி டேட்டா, எஸ்.எம்.எஸ் பலன்களும் ஏராளமாக கிடைக்கிறது. வேலிடிட்டி 84 நாள்கள். நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் எந்த நெட்வொர்க்கிற்கு வேண்டுமானாலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். மேலும், தினமும் 100 எஸ்.எம்.எஸ். சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த பிளானில் தினமும் 3 GB அதிவேக டேட்டா இலவசமாக கிடைக்கும். மொத்தமாக 252 GB கிடைக்கும். தினசரி 3 GB டேட்டா முடிந்துவிட்டால் இணைய வேகம் 40kbps ஆக குறைந்துவிடும். இதேபோல், 299 ரூபாய்க்கு ஒரு நாளைக்கு 3 GB அதிவேக டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் ஆகியவற்றை 30 நாட்களுக்கு பெறுவார்கள். இதேபோல்,  299 ரூபாய்க்கு 3 GB அதிவேக டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ். ஆகியவற்றை 30 நாட்களுக்கு பெறுவார்கள். இந்த பிளானை பெற பி.எஸ்.என்.எல். செயலி மூலமும் ரீசார்ஜ் செய்யலாம். கூகுள் பே, போன் பே போன்ற ஆன்லைன் செயலிகள் வாயிலாகவும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bsnl

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: