Advertisment

வருடம் முழுவதும் இலவச இன்டெர்நெட் போன் கால்கள்...பி.எஸ்.என்.எல் புதிய சேவை

இந்தியாவில் அறிமுகமாகும் முதல் இன்டெர்நெட் டெலிபோனிக் சேவை இதுவே !

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BSNL Wings internet telephony service

BSNL Wings internet telephony service

BSNL Wings internet telephony service : இந்தியாவின் முதல் இண்டெர்நெட் மூலம் போன் சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது பி.எஸ்.என்.எல் நிறுவனம்.

Advertisment

ஒரு மொபைல் ஆப் மூலமாக இந்தியாவில் இருக்கும் எந்த அலைபேசி எண்ணிற்கும் போன் செய்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம்.  இந்த புதிய தொழில்நுட்பத்தை ஜூலையில் அறிமுகப்படுத்தியிருந்தது பி.எஸ்.என்.எல் நிறுவனம்.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பேச வேண்டும் எனும் பட்சத்தில் ரூ.2000ஐத்தினை கட்டணமாக செலுத்த வேண்டும்.  அறிமுகம் செய்யப்பட்ட 2 நாட்களில் மட்டும் சுமார் 4000 ஆயிரம் புக்கிங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதில் வீடியோ கால் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தியிருக்கிறது பி.எஸ்.என்.எல். ஆனால் பி.எஸ்.என்.எல் விங் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த வசதிகளை பெற இயலும்.

மேலும் படிக்க : உலகின் முதல் 5ஜி போனை அறிமுகம் செய்ய இருக்கும் மோட்டோ

பி.எஸ்.என்.எல் விங்ஸ் என்றால் என்ன? எப்படி உபயோகப்படுத்துவது ?

பி.எஸ்.என்.எல் விங்ஸ் என்பது ஒரு இண்டெர்நெட் டெலிபோனி சேவையாகும். இந்த சேவையினை பயன்படுத்தி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் நபர்களுடன் பேசிக் கொள்ளலாம். இந்த ஆப்பினை பயன்படுத்தி இலவசமாக, இணைய வசதி மூலமாக எந்த ஒரு எண்ணிற்கும் போன் செய்து பேசிக் கொள்ளலாம்.

அழைப்பின் மறுமுனையில் இருப்பவரிடம் இந்த ஆப் இருக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் அழைப்பவரிடம் நிச்சயம் 3ஜி அல்லது 4ஜி இணைப்புடன் கூடிய நெட்வொர்க் இருக்க வேண்டும்.

BSNL Wings internet telephony service ரெஜிஸ்டர் செய்வது எப்படி ?

பி.எஸ்.என்.எல் விங்ஸ் இணைப்பினை மொபைல் நம்பர் கொண்டு வாங்கிக் கொள்ளலாம். ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டினை கொடுத்து இந்த ஆப்பினை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

இந்த ஒன்டைம் ரெஜிஸ்ட்ரேசனுக்கு ஆகும் செலவு ரூ. 1099 ஆகும்.  இதில் இணைந்த பின்பு விங்ஸ் ஆப்பினை டவுன்லோட் செய்து யாருக்கு வேண்டுமானாலும் கால் செய்து கொள்ளலாம்.

கட்டணம் எவ்வளவு ?

ஒரு முறை மட்டும் ரெஜிஸ்ட்ரேசன் கட்டணமாக ரூபாய் 1,099 செலுத்தினால் இந்தியாவில் ஒரு வருடம் இந்த சேவையினை பயன்படுத்தலாம். வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களுக்கு அழைப்பு விடுக்க விரும்பினால் 2000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

Bsnl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment