மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் தொலைத் தொடர்பு துறை ப்ரீபெய்ட், போஸ்பெய்ட், ப்ராட் பேண்ட் சேவைகள் எனப் பலவற்றை வழங்கி வருகிறது. எனினும் பி.எஸ்.என்.எல் மொபைல் நெட்வொர்க் 2ஜி சேவைகளை மட்டுமே வழங்கி வருவதால் பயனர் இதில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை.
எனினும் தற்போது, அடுத்தாண்டு 2024-ல் 4ஜி சேவையை வழங்க உள்ளது. மக்கள் பலரும் இந்த சேவையை தேர்ந்தெடுப்பர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், வருடாந்திர திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக மற்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் இருந்து விலை குறைந்தாக இருக்கும்.
அந்த வகையில் 2024-ல் பி.எஸ்.என்.எல் வழங்கும் வருடாந்திர மொபைல் ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
பி.எஸ்.என்.எல் ரூ.1999 திட்டம்
பி.எஸ்.என்.எல்லின் வருடாந்திர திட்டம் (365 நாட்கள்) 600 ஜிபி லம்ப்சம் டேட்டாவுடன் வருகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி, ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் மற்றும் இலவச PRBT போன்ற நன்மைகளை இந்த திட்டம் கொண்டுள்ளது. அதோடு, லோக்துன், ஈரோஸ் நவ் பொழுதுபோக்கு சேவைகளை வழங்கிறது.
ரூ. 2399 திட்டம்
பி.எஸ்.என்.எல்லின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி, ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் மற்றம் 2ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது. ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகளை 30 நாட்களுக்கும், லோக்துன் 30 நாட்களுக்கும் இலவசமாக வழங்குகிறது. இது இந்தியாவில் வழங்கப்படும் குறைந்த விலையில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கும் ஆண்டு திட்டமாகும்.
ரூ. 2999 திட்டம்
பி.எஸ்.என்.எல் வழங்கும் ரூ.2999 திட்டம் 395 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இது உண்மையில் 13 மாதங்கள், ஒரு வருடம் + 1 மாதம் கூடுதல் வேலிடிட்டி உடன் வருகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி, 3ஜிபி தினசரி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் ஆகியவை வழங்குகிறது. ஆனால் ஜியோ இதே விலையில் தினசரி 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஆனால் அதோடு ஜியோ 5ஜி இலவச டேட்டாவை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துடன் பிற கூடுதல் நன்மைகள் எதுவும் இல்லை.
பி.எஸ்.என்.எல்லின் மற்றொரு ரீசார்ஜ் திட்டம் ரூ.1499 விலையில் இதே வசதிகளுடன் வழங்கப்படுகிறது. ஆனால் அது 336 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. அதாவது 11 மாதங்கள். இருப்பினும் இதுவும் பி.எஸ்.என்.எல்லின் சிறந்த திட்டங்களில் ஒன்றாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“