Budget Laptops: கொரோனா ஊரடங்கின் காரணமாக, பல்வேறு அலுவலகங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலைபார்க்க அனுமதித்துள்ளன. பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக, மொபைல்போன், லேப்டாப் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்கள் மட்டுமல்லாது, இசைக்கலைஞர்கள் உள்ளிட்டோரும் எலெக்ட்ரானிக் கருவிகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதிக திறன் பேட்டரி, திறன்மிகு புராசசர், வீடியோ காலிங் வசதி, ஓடிடி வசதி, கேமிங் வசதி உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்ட அதேசமயம் குறைந்த பட்ஜெட்டிலான இன்டெல் ஐ3 புராசசர் கொண்ட லேப்டாப்களின் அணிவகுப்பை இங்கு காண்போம்.
Dell Inspiron 3493
லேப்டாப் வர்த்தகத்தில் டெல் நிறுவனம் முன்னணியில் உள்ளது அனைவரும் அறிந்ததே. Dell Inspiron 3493 லேப்டாப்பில், 14 இஞ்ச் புல் ஹெச்டி எல்இடி டிஸ்பிளே வித் ஆன்டி கிளார் வசதி உள்ளது. 10ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ3 புராசசர் உள்ளது. 4 ஜிபி டிடிஆர்4 ராம் மற்றும் 256 ஜிபி எஸ்எஸ்டி உள்ளது. விண்டோஸ் 10 ஓஎஸ்ஸில் இயங்கும் வகையிலான இன்டெல் யுஹெச்டி கிராபிக்ஸ் கார்டு உள்ளது.எம்எஸ் ஆபிஸ் ஹோம் மற்றும் மாணவர்கள் பதிப்பு 2019 கூடுதல் இணைப்பாக வழங்கப்படுகிறது. 1.68 கிலோ எடையிலான இந்த லேப்டாப், 4 மணிநேரத்தில் பேட்டரி முழு சார்ஜ் ஏறும் வசதி உள்ளது. கண்கவர் பிளாட்டினம் சில்வர் நிறத்தில் அமேசானில் உள்ள இந்த லேப்டாப்பின் விலை ரூ.38,867 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Lenovo ThinkBook 14
Lenovo ThinkBook 14 லேப்டாப்பில், ஆன்டி கிளார் வசதியுடன் கூடிய 14 இஞ்ச் புல் ஹெச்டி எல்இடி டிஸ்பிளே உள்ளது. 10ம் தலைமுறை, இன்டெல் கோர் ஐ3 1.2 ஜிகா ஹெர்ட்ஸ் புராசசர் உள்ளது. 4 ஜிபி டிடிஆர்4 ராம் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் உள்ளது. டால்பி ஆடியோ வசதியுடனான டுயல் ஸ்பீக்கர்கள் உள்ளன. ஒருமுறை பேட்டரி சார்ஜ் ஏற்றினால் 9 மணிநேரம் நீடித்துழைக்கும் திறன் உள்ளது.1.49 கிலோ எடையுடனான இந்த லேப்டாப், மினரல் கிரே கலரில் கிடைக்கிறது. அமேசானில் உள்ள இந்த லேப்டாப்பின் விலை ரூ.37,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ASUS Vivobook X545FA-EJ158T i3-10110U
ASUS Vivobook லேப்டாப், 15.6 இஞ்ச் புல் ஹெச்டி டிஸ்பிளே உள்ளது.இன்டெல் ஐ3 6320 புராசசர், 4 ஜிபி டிடிஆர்4 ராம் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் ஹார்ட் டிஸ்க் உள்ளது. விண்டோஸ் 10 ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. 2.5 கிலோ எடையுள்ள இந்த லேப்டாப், அமேசானில், ரூ.36,999க்கு கிடைக்கிறது.
HP 15s du2069TU
HP 15s லேப்டாப், 15.6 இஞ்ச் புல் ஹெச்டி டிஸ்பிளே உள்ளது. 1.2GHz Intel i3-1005G1 10ம் தலைமுறை புராசசர் உடன் 4GB DDR4 RAM and 1TB hard disk உள்ளது. டுயல் ஸ்பீக்கர்கள் மற்றும் அல்ட்ரா ஹெச்டி இன்டர்கிரேடட் கிராபிக்ஸ் கார்டு உள்ளது. விண்டோஸ் 10 ஹோம் ஆபரேடிங் சிஸ்டத்துடன் மைக்ரோசாப்ட் ஆபிஸ் பேக் உள்ளது. 6 மணிநேரம் பேக்அப் உள்ள பேட்டரி சேர்த்து 1.75 கிலோ எடையிலான லேப்டாப், அமேசானில் ரூ.37,549க்கு கிடைக்கிறது.
Lenovo Ideapad Slim 3i
Lenovo Ideapad Slim 3i, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட இன்டெல் கோர் ஐ3 புராசசர் உடன் 4GB DDR4 RAM and 1TB hard disk உள்ளது. ஆன்டி கிளேர் வசதியுடன் 15.6 இஞ்ச் புல் ஹெச்டி டிஸ்பிளே உள்ளது.ப்ரி இன்ஸ்டால்ட் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2019 உைன் விண்டோஸ் 10 ஹோம் ஆபரேடிங் சிஸ்டம் உள்ளது. ஸ்மார்ட்போன்கள், வயர்லெஸ் ஸ்பீக்கர்கள், இயர்போன்களை புளுடூத் தொழில்நுட்பம் உள்ளது. டால்பி ஆடியோ உடன் டுயல் ஸ்பீக்கர்கள் உள்ளன. 1.85 கிலோ எடையுடனான இந்த லேப்டாப், ரூ.37,549க்கு கிடைக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.