Budget Mobile Phone Tamil News: பண்டிகை காலம் நெருங்கி வருவதால், உங்களில் பலர் உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருக்கு புதிய ஸ்மார்ட்போனை பரிசாக வழங்குவதற்கு நீங்கள் தேடிக்கொண்டிருக்கலாம். உங்களிடம் விலையுயர்ந்த பட்ஜெட் இல்லையென்றாலும், ரூ.10,000-க்கு கீழ் ஓர் நல்ல ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், அதிலும் அடுத்த ஆண்டு தீபாவளி வரை நன்றாக உழைக்கும் மொபைல் போனை நீங்கள் தேர்வு செய்ய விரும்பினால், உங்களுக்கான ஆப்ஷன்கள் இங்கே இருக்கின்றன. உங்கள் வேலையை எளிதாக்குவதற்கு, நல்ல விவரக்குறிப்புகளுடன் ரூ.10,000-க்கு கீழ் பெறக்கூடிய சிறந்த தொலைபேசிகளின் பட்டியல் இங்கே உள்ளன.
ரியல்மீ C15
ரியல்மீ C15-ன் 3 ஜிபி RAM / 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.9,999 ஆகவும், 4 ஜிபி ரேம் / 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.10,999-ஆகவும் உள்ளது. இதில் 6.5 இன்ச் HD + டிஸ்ப்ளே உள்ளது மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி 35 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. கூகுளின் ஆண்ட்ராய்டு 10 இயக்க முறைமையை, நிறுவனத்தின் ரியல்மீ UI ஸ்கின்னுடன் இயக்குகிறது. இவை அனைத்தும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000 mAh பேட்டரியால் ஆதரிக்கப்படுகின்றன. குவாட் ரியர் கேமரா (13MP + 8MP + 2MP + 2MP) அமைப்புடன் வருகிறது. முன்பக்கத்தில், செல்ஃபிக்காக 8MP சென்சார் இருக்கிறது.
ரெட்மி 9 ப்ரைம்
ரெட்மி 9 ப்ரைமின் 4 ஜிபி RAM / 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ.9,999-க்கும், 4 ஜிபி RAM / 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.10,999-க்கும் கிடைக்கும். இந்த விலையில், இது அசத்தலான விவரக்குறிப்புகளைக் கொண்ட நல்ல தோற்றமுடைய ஸ்மார்ட்போன். இந்த சாதனம், HD+ ரெசல்யூஷனுடன் 6.35 இன்ச் நட்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 5,020 mAh பேட்டரியுடன் இணைக்கப்பட்ட மீடியா டெக் ஹீலியோ ஜி 80 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதன் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 13MP முதன்மை சென்சார், 8MP இரண்டாம் நிலை சென்சார், 5MP மூன்றாம் நிலை சென்சார் மற்றும் 2MP நான்காவது சென்சார் ஜோடியாக உள்ளது. பின்புறத்தில், கைரேகை சென்சாரும் முன்பக்கத்தில், 8MP செல்ஃபி கேமராவும் உள்ளன.
போக்கோ C3
போக்கோ C3-ன் 3 ஜிபி RAM / 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட், ரூ.7,499-ஆகவும், 4 ஜிபி RAM / 64 ஜிபி ஸ்டோரேஜ் வெரியன்ட் ரூ.8,999-ஆகவும் உள்ளது. இதில், 20: 9 விகிதத்துடன் 6.53 இன்ச் HD + டிஸ்ப்ளே இருக்கிறது. மேலும், மீடியாடெக் ஹீலியோ ஜி 35 ப்ராசசர் மூலம் 5,000mAh பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. 13MP முதன்மை சென்சார், 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பு இதில் உள்ளது. முன்பக்கத்தில், 5MP செல்ஃபி கேமரா இருக்கிறது.
ரியல்மீ நர்சோ 20A
ரியல்மீ நர்சோ 20A-ன் 3 ஜிபி RAM / 32 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.8,499 மற்றும் 4 ஜிபி RAM / 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்டின் விலை ரூ.9,499. 6.5 இன்ச் மினி டிராப் ஸ்கிரீனை உள்ளடக்கியது ரியல்மீ நர்சோ 20A. இதில், 5 MP செல்பி கேமரா உள்ளது. மேலும், குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. வட்ட கைரேகை சென்சாருடன் ஜோடியாகப் பின்புறத்தில் 12MP டிரிபிள் கேமரா அமைப்பை உள்ளடக்கியது. இவை அனைத்தும் 5,000 mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகின்றன.
ரியல்மீ C3
ரியல்மீ C3 சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், 3 ஜிபி RAM / 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ .7,999 விலைக்கும், 4 ஜிபி RAM / 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.8,999 விலைக்கும் கிடைக்கின்றன. இந்த சாதனம், மீடியாடெக் ஹீலியோ ஜி 70 ப்ராசசருடன் ஜோடியாக 6.53 இன்ச் எச்டி + டிஸ்ப்ளேவோடு வருகின்றன. கூகுளின் ஆண்ட்ராய்டு 10 இயக்க முறைமையை, நிறுவனத்தின் சொந்த ரியல்மீ UI ஸ்கின்னுடன் இயக்குகிறது. இவை அனைத்தும் 5,000 mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகின்றன. இந்த சாதனத்தில், 12MP முதன்மை சென்சார் மற்றும் 2MP இரண்டாம் நிலை சென்சார் கொண்ட இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபிக்களுக்கு 5MP சென்சார் கேமரா உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.