/indian-express-tamil/media/media_files/2025/04/23/ncrFUnfcz9n9uPg3Ol7W.jpg)
ரூ.6,499க்கு 5200mAh பேட்டரி, 32MB கேமரா! ரெட்மி A5 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்!
பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் சியோமி ரெட்மி ஏ5 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. சீனாவை சேர்ந்த பிரபல மின்னணுவியல் நிறுவனமான சியோமியின் துணை பிராண்ட்தான் ரெட்மி. 2013-ஆம் ஆண்டு முதல் குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட்போன்களை வழங்கி வரும் ரெட்மி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது தனது புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான ரெட்மி ஏ5-ஐ களமிறக்கியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை கடந்த ஏப்ரல் 16 ஆம் தி முதல் இந்திய சந்தையில் துவங்கியுள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் அமேசான், எம்ஐ.காம், ஃபிளிப்கார்ட் மற்றும் அனைத்து முன்னணி சில்லறை விற்பனைநிலையங்களிலும் இந்த போனை வாங்கிக்கொள்ளலாம்.
Redmi A5 | Price & Specifications | Xiaomi India
ரெட்மி A5-ன் சிறப்பம்சங்கள்:
6.88 இன்ச் HD+ டிஸ்ப்ளேவுடன் சிறந்த காட்சி அனுபவம். அதிநவீன ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் மற்றும் 2 வருட ஓஎஸ் அப்டேட் உத்தரவாதம். வேகமான மற்றும் திறமையான செயல்பாட்டிற்கு ஆக்டா-கோர் Unisoc T7250 ப்ராஸஸர். தெளிவான மற்றும் துல்லியமான புகைப்படங்களுக்கு 32 மெகாபிக்சல் பிரதான கேமரா. அட்டகாசமான செல்ஃபிக்களுக்காக 8 மெகாபிக்சல் முன்புற கேமரா. அதிவேக 4ஜி நெட்வொர்க் வசதி. நவீன யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 15 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு. நீடித்து உழைக்கும் 5200mAh பேட்டரி. 3ஜிபி, 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு விருப்பங்கள். இதன் ஆரம்ப விலை ரூ.6,499 முதல் கிடைக்கிறது.
ரெட்மி A5 ஸ்மார்ட்போன், பட்ஜெட் விலையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தையும் சிறந்த அம்சங்களையும் விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.