Mi Band 5 Review Tamil: இப்பொழுதெல்லாம் 'ஸ்ட்ரெஸ்' என்ற வார்த்தையை உபயோகிக்காத ஆட்களே இல்லை. ஆனால், இந்தப் பிரச்சினையைப் போக்கும் விதமாக Mi பேண்ட் 5 உதவுகிறது. ரூ.2,499 விலையில் ஷியோமி அறிமுகப்படுத்திய புதிய ஹெல்த் பேண்ட், உங்கள் மன அழுத்தத்தைக் கண்காணிக்கும் திறன் கொண்டது.
உங்களிடம் ஏற்கெனவே Mi Band 4 இருந்தால், சமீபத்திய மேம்படுத்தப்பட்ட பேண்ட் வாங்குவதற்கான அழுத்தமான காரணங்கள் எதுவுமில்லை என்றாலும் தனிப்பட்ட செயல்பாட்டு நுண்ணறிவு (Personal Activity Intelligence (PAI)), மன அழுத்தக் கண்காணிப்பு, சுவாச உடற்பயிற்சி வழிகாட்டுதல் மற்றும் மாதவிடாய் காலம் போன்ற சில சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது Mi பேண்ட் 5.
மார்க்கெட்டில் கிடைக்கும் மற்ற Mi பேண்ட் போலவேதான் Mi பேண்ட் 5 அமைப்பும் இருக்கிறது. ஆனால், கருப்பு நிறத்தோடு இப்போது வெவ்வேறு வண்ண ஸ்டராப்ஸ்களிலும் கிடைக்கின்றன. விருப்பப்பட்டால் அவற்றை mi.com-லிருந்து தனியாக வாங்கிக்கொள்ளலாம்.
இந்த பேண்டில் செய்யப்பட்ட ஓர் நல்ல மாற்றம் என்னவென்றால் அது சார்ஜிங் நுட்பம்தான். முந்தைய அனைத்து Mi ஸ்மார்ட் பேண்ட் மாடல்களிலும் இல்லாத மேக்னெட்டிக் சார்ஜிங் நுட்பம் Mi பேண்ட் 5-ல் உள்ளது. பழைய Mi பேண்ட்களில் காப்ஸ்யூலை (Capsule)வெளியே எடுத்து தனியாக சார்ஜ் செய்யவேண்டும். பலருக்கு இந்த செயல்பாடு பிடிக்காமல் இருந்தது. ஆனால், Mi பேண்ட் 5-ஐப் பொறுத்தவரை, பெட்டியில் உள்ள சார்ஜர், பேண்டோடு காந்தமாக இணைத்து சார்ஜ் செய்கிறது.
Mi band 5 Tamil review
மற்ற எல்லா Mi பேண்ட்களையும் போலவே, Mi Fit செயலி இதற்கும் அவசியம். நீங்கள் முதல் முறையாக Mi பேண்டைப் பயன்படுத்தினாலும் இதனை இணைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது. உங்கள் ஸ்மார்ட்போனில் Mi Fit செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் Mi ஐடியுடன் உள்ளே சென்று, சாதனத்தைத் தேடி, pair செய்தால் போதும். பயன்படுத்த ஆரம்பிக்கலாம். புதிய Mi பேண்ட் ஒரு பெரிய டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. Mi பேண்ட் 4-ஐ விட வண்ணமயமாகவும் பிரகாசமாகவும் இருக்கும். மேலும், ஷியோமி புதிய வாட்ச் முகங்களையும் சேர்த்துள்ளது. Mi ஃபிட் செயலி மூலம் அல்லது பேண்டிலிருந்தே புதிய முகத்தைச் சேர்த்துக்கொள்ளலாம்.
Mi band 5 Tamil review
இதில் இருக்கும் ஸ்ட்ரெஸ் காஜ் (stress gauge) புதிய அம்சம். ஆனாலும், எல்லா அளவுகளையும் துல்லியமாகப் பெறுவீர்கள் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது.
இதயத் துடிப்பு மானிட்டர் இதிலும் இருக்கிறது. மாதவிடாய் சுழற்சியைக் கண்காணிக்கும் அம்சம் மற்றும் கோவிட் -19 நேரங்களில் மிகவும் முக்கியமான ‘சுவாசப் பயிற்சி’ அம்சம் உள்ளிட்டவை இந்த Mi பேண்ட் 5-ல் உள்ள மற்ற இரண்டு நல்ல அம்சங்கள். விளையாட்டு பயன்முறையில் யோகா, இண்டோர் சைக்கிளிங் உள்ளிட்ட பிற புதிய அறிமுகங்களும் உள்ளன.
இதுவரை வெளிவந்த அனைத்து Mi பேண்ட்களின் முக்கிய சிறப்பம்சங்களில் பேட்டரி முக்கிய பங்கை வகிக்கிறது. மொத்தத்தில், குறிப்பிட்ட விலை புள்ளியில், Mi பேண்ட் 5 உபயோகிக்கச் சிறந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"