Budget Smartphone Moto E6s specifications, price, launch, availability, review : தீபாவளி வரப் போகின்ற நேரத்தில் வாங்குற போனஸை பாத்து பாத்து செலவு செய்ய மனசு சொல்லும். ஸ்மார்ட்போன் ஒன்றை பட்ஜெட் விலையில் வாங்க வேண்டும் என்பது தான் உங்களுடைய தீபாவளி பர்சேஸ் ப்ளான் என்றால் இந்த ஸ்மார்ட்போனை ட்ரை பண்ணுங்க...
Budget Smartphone Moto E6s specifications, price, launch, availability, review
6.1 இன்ச் எச்.டி திரையை கொண்டுள்ளாது இந்த ஸ்மார்ட்போன். கிராஃபைட் நிறௌம் மற்றும் ரிச் க்ரென்பெர்ரி நிறங்களில் வெளியாகி இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் ப்ளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்பக்கத்தை தனியாக கழற்றி மாற்ற இயலும் என்பதால், தரமான பேட்டரிகளை குறைந்த விலையிகும் விற்பனை செய்து வருகிறது. கைக்கு அடக்கமான ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது. 80% டிஸ்பிளே டூ ஸ்கிரீன் ரேசியோவையும், டாட் நாட்சினையும் கொண்டுள்ளது.
ஐ.பி.எஸ் எல்சிடி பேனலில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனின் எச்.டி ரெசலியூசன் 1560×720 பிக்சல்களாகும். ப்ரைட்னஸ் கொஞ்சம் குறைவாகவே இருப்பதால் வெளியே, சூரிய வெளிச்சத்தில் பயன்படுத்துவதில் சற்று சிரமமாகவே தான் இருக்கிறது.
4ஜிபி ரேம் மற்றும் மீடியாடெக் ஹெலியோ பி22 ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 64ஜிபி ஸ்டோரேஜை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் லேக் எதுவும் இல்லாமல் தொடர்ந்து போனை இயக்க இயலும் என்பது தான் மகிழ்ச்சி தரும் செய்தி.
Moto E6s கேமரா
இதில் இரண்டு பின்பக்க கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. ஒன்று 13 எம்.பி. செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். மற்றொன்று 2 எம்.பி. செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். செல்ஃபி கேமரா செயற்திறன் 8 எம்.பி. ஆகும்.
பேட்டரி
3000mAh செயற்திறன் கொண்ட பேட்டரி இதில் பொறுத்தப்பட்டுள்ளது. 87% சார்ஜ் ஆக மூன்றரை மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. முழுவதும் சார்ஜ் ஆக எப்படியும் மேலும் 45 நிமிடங்கள் அதற்கு தேவைப்படுகிறது. ஆனால் ஒரு நாள் முழுவதும் நீங்கள் ஸ்மார்ட்போனை ஹெவி யூசேஜ் செய்தாலும் பேட்டரி நிற்கிறது.
மேலும் படிக்க : 10 மாத சந்தாவில் 12 மாதங்களுக்கு டிவி சேவைகளை வழங்கும் டிஷ் டிவி, டி2எச்