Budget Smartphone Vivo U10 Specifications, price, launch, availability : ரெட்மி ஸ்மார்ட் போன்கள் தான் அடிக்கடி பட்ஜெட் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிறப்பான பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வந்தனர். பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தொடங்கியதும் முன்னணி நிறுவனங்கள் பலவும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் துவங்கின. சில தினங்களுக்கு முன்பு தான் மோட்டோ தங்களுடைய E6s ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதுவும் 8 ஆயிரம் ரூபாய்க்கு. தற்போது அதே வரிசையில் விவோ தங்களுடைய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
மேலும் படிக்க : மோட்டோவின் E6s ஸ்மார்ட்போன் விலை இவ்வளவு தானா?
யூ சிரியஸில் வெளியாகும் இரண்டாவது ஸ்மார்ட்போன் இதுவாகும். அமேசான் இணையத்தில் செப்டம்பர் மாதம் 29ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது இந்த ஸ்மார்ட்போன்.
Budget Smartphone Vivo U10 விலை மற்றும் சிறப்பு சலுகைகள்
மூன்று வேரியண்ட்டுகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன் வேரியண்ட்டுகள் மற்றும் விலை முறையே
3ஜிபி + 32 ஜிபி மாடல் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 8,990 ஆகும்
3ஜிபி + 64 ஜிபி மாடல் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9,990 ஆகும்.
4ஜிபி + 64 ஜிபி மாடல் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10,990 ஆகும்.
எஸ்.பி.ஐ கார்ட்களில் வாங்கும் போது 10% தள்ளுபடி மற்றும் ஜியோவின் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
6.35 இன்ச் எச்டி + ஐ.பி.எஸ் டிஸ்பிளேவுடன் கூடிய ஸ்மார்ட்போன் இதுவாகும்.
வாட்டர் ட்ராப் நோட்ச் வடிவமைப்பைப் பெற்றுள்ளது
2.5டி கர்வ்ட் க்ளாஸ் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது மேலும் அதே பக்கத்தில் பிங்கர் பிரிண்ட் சென்சாரும் பொருத்தப்பட்டுள்ளது.
குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 665 ப்ரோசசரை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை இயங்கு தளத்தில் இயங்கக் கூடியது.
டார்க் மோடுடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போனின் கிராஃபிக்ஸ் கார்ட் அட்ரெனொ 610 ஜிபியூ ஆகும்.
எலெக்ட்ரிக் ப்ளூ மற்றும் தண்டர் ப்ளாக் என்று இரண்டு அழகான நிறங்களில் வெளியாகிறது இந்த ஸ்மார்ட்போன்.
5000mAh பேட்டரியுடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் 7 மணி நேரம் வரை பப்ஜி விளையாடும் போதும், யூட்யூப் பார்க்கும் போது 12 மணி நேரம் வரையும் தாக்குப்பிடிக்கிறது.
மூன்றூ பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது. முதன்மை கேமராவின் செயற்திறன் 13 எம்.பி. ஆகும், அல்ட்ரா வைட் கேமரா 8 எம்.பி. செயற்திறனை கொண்டுள்ளது. 2 எம்.பி. பூக் லென்ஸையும் பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன். ஃப்ரண்ட் கேமராவின் செயற்திறன் 8 எம்.பி. ஆகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.