Budget Smartphone Xiaomi Redmi 8A specifications, price, launch, availability, camera features : மோட்டோ மற்றும் விவோ இந்த வாரங்களில் தங்களின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது ரெட்மி தங்களுடைய பட்ஜெட் ஸ்மார்போனை வெளியிட்டுள்ளது. சியோமி வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் பட்ஜெட் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் இருக்கிறதா என்று பார்ப்போம்
மேலும் படிக்க : இந்த வாரம் பட்ஜெட் போன்கள் வாரம் : விவோ யூ10 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை
ரெட்மி வெளியிட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் 29ம் தேதியில் இருந்து ஃப்ளிப்கார்ட் மற்றும் எம்.ஐ. காம் இணையதளத்தில் விற்பனைக்கு வர உள்ளது. இதன் விலை ரூ.6,4999 என்பதால் பட்ஜெட் வாடிக்கையாளர்களை இந்த ஸ்மார்ட்போன் விலை கவரும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
இதன் பேட்டரி 5000mAh செயற்திறனை கொண்டிருக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 5 நாட்கள் வரை நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. 18வாட்ஸ் சூப்பர் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் இயங்கும் சார்ஜர் இந்த ஸ்மார்ட்போனுடன் வருகிறது.
Budget Smartphone Xiaomi Redmi 8A வேரியண்ட் மற்றும் விலை
2ஜிபி +32ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜூடன் வெளியாகும் போனின் விலை ரூ. 6,499 ஆகும்
3ஜிபி + 32ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜூடன் வெளியாகும் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 6,999 ஆகும்.
Xiaomi Redmi 8A சிறப்பம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போன் 29ம் தேதி காலையில் இருந்து ஆன்லைனில் விற்பனைக்கு வருகிறது. ஆஃப்லைனில் Mi Home, Mi Studio, Mi Stores-களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஆரா டிசைனில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் 6.22 இன்ச் எச்.டி திரையை கொண்டுள்ளது.
கார்னிங் கொரில்லா க்ளாஸ் 5-ஐ பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
12 எம்.பி. ரியர் கேமராவையும், 8 எம்.பி. செல்ஃபி கேமராவையும் பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போனில் ஸ்நாப்ட்ராகன் 439 ப்ரோசசரைப் பொறுத்தப்பட்டுள்ளது.
0%-ல் இருந்து 100% வரை சார்ஜ் ஆக வெறும் 3 மணி நேரங்களையே எடுத்துக்கொள்கிறது இந்த ஸ்மார்ட்போன் என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம்.