Budget smartphones Realme 3 Pro, Redmi Y3, Samsung Galaxy M40 : பட்ஜெட் போன்களை தொடர்ந்து இந்தியாவில் களம் இறக்கும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள். ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ உங்களின் பார்வைக்கு.
Budget smartphones Realme 3 Pro, Redmi Y3, Samsung Galaxy M40 வெளியீடு :
Realme 3 Pro
இந்த ஸ்மார்ட்போன் இந்த மாதம் 22ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான ரெட்மி நோட் 7 ப்ரோவிற்கு போட்டியாக இந்த போன் களம் இறக்கப்பட உள்ளது. எச்.டி.ஆர் கேபபிலிட்டி மற்று நைட் மோட் கொண்ட கேமராக்களை பெற்றுள்ளது இந்த போன்.
Realme 3 Pro சிறப்பம்சங்கள்
இதுவரை வெளியான தகவலின் படி இந்த போனில் குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 710 பொருத்தப்பட்டுள்ளது
வூக் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜியில் வெளியாக உள்ளது
ஒன்பிளஸ் 6T- யில் பயன்படுத்தப்பட்ட சோனியின் IMX519 கேமரா சென்சார் இதில் பொருத்தப்பட்டுள்ளது
மூன்று ஸ்டோரேஜ் வேரிண்ட்டுகளில் வெளி வர உள்ளன. ( 4GB RAM + 32GB storage, 4GB RAM + 64GB storage, 6GB RAM + 64GB )
மூன்று அழகான நிறங்களில் இந்த போன்கள் வெளிவர உள்ளன என்றாலும் அதன் நிறங்கள் குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை.
Xiaomi Redmi Y3
சியோமியின் ரெட்மி Y சீரியஸில் புதிய போன் வருகின்ற 24ம் தேதி வெளியாக உள்ளது. Y3 தான் வெளியாக உள்ளது என்று நம்பிக்கைக்குரிய செய்திகள் இன்னும் வெளிவரவில்லை என்றாலும், ரெட்மியின் டிவீட் அதைத்தான் கூறுகின்றது.
Xiaomi Redmi Y3 சிறப்பம்சங்கள்
ரெட்மி நோட் 7 போலவே டாட் நோட்ச் டிஸ்பிளேயுடன் தான் வெளியாக உள்ளது இந்த போன். இதில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது தான் இந்த ஸ்மார்ட்போனின் டேக்லைனாகவே உள்ளது. இதன் ரியர் கேமரா 12 எம்.பி + 2 எம்.பி. செட்டப்பில் வெளியாக உள்ளது.
Samsung Galaxy M40
சாம்சங் நிறுவனத்தின் எம் சீரியஸில் புதிதாக ஒரு போன் வெளியாக உள்ளது. இந்தியாவில் மட்டுமே எம். சீரியஸ் போன்கள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அந்நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
Samsung Galaxy M40 சிறப்பம்சங்கள்
டூயல் சிம் கார்ட், ஆண்ட்ராய்ட் 9 பை இயங்கு தளம் என்று சிறப்பம்சங்களில் கெத்து காட்டி வருகிறது இந்த போன்.
இதில் சூப்பர் ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரை பொருத்தப்பட்டுள்ளது.
ஆக்டா கோர் ப்ரோசசர் (எக்ஸினாஸ் 7904) பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5000 mAh பேட்டரி செயல்திறன் கொண்டுள்ளது.
4 பின்பக்க கேமராக்களை இது பெற்றுள்ளது.