ஐரோப்பிய ரிமோட் சென்சிங் செயற்கைக் கோளான (ERS-2) தனது 13 ஆண்டுகள் விண்வெளிப் பயணத்தை
முடித்து நேற்று பசிபிக் பெருங்கடலில் விழுந்து எரிந்தது. விண்கலம் வடக்கு பசிபிக் பெருங்கடல் வழியாக நுழைந்து கடலில் விழுந்தது என்றும் இதனால் மனிதர்கள் பிற உயிரினங்கள் மற்றும் சொத்துக்களுக்கு எந்த வித சேதமும் ஏற்படவில்லை என்று ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி உறுதிப்படுத்தியது.
ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஏவப்பட்ட ஐரோப்பிய ரிமோட் சென்சிங் செயற்கைக் கோள், ERS-2, பூமியின் நிலப்பரப்புகள், கடல் வெப்பநிலை, ஓசோன் படலம் மற்றும் துருவப் பனி போன்ற நீண்ட கால தரவுகளை வழங்கும் பணியை மேற்கொண்டது. அதன் மூலம் அனுப்பப்பட்ட தரவு பூமி அமைப்பைப் பற்றிய நமது புரிதலில் புரட்சியை ஏற்படுத்தியது.
3 ஆண்டுகள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த விண்கலம் அதன் வாழ்நாளைத் தாண்டி தொடர்ந்து சேவை செய்து 2011-ல் செயலிழக்கச் செய்யப்பட்டது. அதன்பின்னர், விண்கலம் பல ஆண்டுகளாக விண்வெளி சுற்றுப் பாதையில் சுற்றிக் கொண்டிருந்த நிலையில், இறுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன் பூமியின் வளிமண்டலத்தை நெறுங்கி வந்தது.
இதையடுத்து செயற்கைக் கோளின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு 21 பிப்ரவரி 2024 அன்று, அது 80 கி.மீ உயரத்தை எட்டியது. இதன் பின் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து பசிபிக் பெருங்கடலில் விழுந்து எரிந்தது.
ERS-2 செயற்கைக் கோள் ஏறக் குறைய ஒரு பள்ளிப் பேருந்தின் அளவு கொண்டது. 5,547 பவுண்டுகள் (2,516 கிலோகிராம்) எடையுள்ளதாக இருந்தது. தரையிறக்கும் போது அதன் எரிசக்தி தீர்ந்து அதன் எடை சுமார் 5,057 பவுண்டுகள் (2,294 கிலோ) குறைந்து இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“