scorecardresearch

ஸ்மார்ட்போன் வாங்கப் போகிறீர்களா? சிஸ்டம் அப்டேட் வலையில் சிக்காம இருக்க இத படிங்க!

2022இல் வெளியாகும் ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 11 பதிப்பில் தான் வெளியாகுகின்றன. நீண்ட நாள்களுக்கு ஒரே செல்போனை பயன்படுத்தக் கூடாது என்பதற்காக செல்போன் நிறுவனங்கள் செய்யும் ஸ்மார்ட் ஹேக்கை இந்தச் செய்தி தொகுப்பில் காணலாம்.

ஸ்மார்ட்போன் வாங்கப் போகிறீர்களா? சிஸ்டம் அப்டேட் வலையில் சிக்காம இருக்க இத படிங்க!

Asus Zenfone 8 ஸ்மார்ட்போன் மே 2021இல் ஆண்ட்ராய்டு 11 வெர்ஷனில், உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், அந்த மொபைலுக்கு டிசம்பர் 2021இல் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைத்தது.

பின்னர் சிறிது நாள்களில், அதே மொபைல் இந்தியாவில் Asus 8Z என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், புதிய ஆண்ட்ராய்டு 12 அப்டேட்வுடன் வராமல், மீண்டும் ஆண்ட்ராய்டு 11 வெர்ஷனிலே அறிமுகமானது.

எதிர்ப்பார்த்தப்படியே, இந்தியாவில் அந்த மொபைல் அறிமுகமான ஓரிரு நாளில், ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்பட்டது. இதை கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கும் போது தான், செல்போன் நிறுவனங்களின் ஸ்மார்ட் மூவ் தெரியவந்தது.

சாதாரணாக ஒரு ஸ்மார்ட்போனுக்கு இரண்டு சிஸ்டம் அப்டேட் வழங்கப்படும் என உறுதியளிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டே, ஆண்ட்ராய்டு 11 இல் அறிமுகப்படுத்தி, உடனே ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்குகின்றனர். இதன் மூலம், அந்த மொபைலில் மேலும் ஒரு அப்டேட் மட்டுமே கிடைக்கக்கூடும். ஆண்ட்ராய்டு 14 அப்டேட் கிடைக்கும் என்று கனவில் கூட பயனாளர்களால் நினைத்துப்பார்க்க முடியாது. இந்த ட்ரெண்டின் பின்னால் இருக்கும் வணிகத்தை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

பழைய ஆண்ட்ராய்டு வெர்ஷனில் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி, பின்னர் ஓரிரு நாளில் புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷன் அப்டேட் வழங்குவதன் மூலம், ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கவேண்டிய மேலும் ஒரு அப்டேட்டை செல்போன் நிறுவனங்கள் தடுத்து நிறுத்துகின்றன.

புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷன் நம்ம போனுக்கு கிடைக்காது என கருதுகையில், செல்போன் பிரியர்கள் தானாகவே புதிய பதிப்பை நோக்கி படையெடுப்பார்கள். ஒருவேளை அதே பிராண்டில் புதிய மொபைல்களை தேடி எடுக்க வாய்ப்பு அதிகமுள்ளது. இந்த ட்ரெண்டை ஒரு சில போன்களில் காணமுடிந்தது.

ஜனவரி 15 அன்று ஓன்பிளஸ் வெளியிட்ட OnePlus 9RT ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 11 பதிப்புடன் வந்தன. ஆனால், இந்த மொபைல் வெளியீடு, ஆண்ட்ராய்டு 12 அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகே இருந்தது.

இதற்கு முந்தைய பதிப்பான ஓன்பிளஸ் 9R இல் உபயோகித்த அதே ஆண்ட்ராய்டு வெர்ஷனையே அறிமுகப்படுத்தியது. 2021 மற்றும் 2022 ஆகிய 2 ஆண்டுகளிலும் அறிமுகமான 2 மாடல்களில், ஒரே ஆண்ட்ராய்டு 11 ஐ உபயோகித்ததால், அத்தகைய ஸ்மார்ட்போனால் ஆண்ட்ராய்டு 13 வரை மட்டுமே அப்டேட் செய்திட முடியும்.

ஏன் புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷன் வாங்க வேண்டும்

நீண்ட காலம் பயன்பாட்டுக்காக செல்பானை வாங்குபவர்கள் சமீபத்திய ஆண்ட்ராய்டு பதிப்பில் தொடங்கும் ஒன்றை வாங்கினால், குறைந்தப்பட்சம் ஓரிரு ஆண்டுகளுக்கு சிஸ்டம் அப்டேட் செய்து மொபைல் உபயோகிக்கமுடியும். புதிய வசதிகளும் கிடைக்க்கூடும்.

கேமரா மற்றும் ஹாட்வேர் சிறப்பு அம்சங்களுக்கே அதிக முக்கியத்தவம் தரும் நிலையில், ஆண்ட்ராய்டு வெர்ஷன் விவரத்தையும், எத்தனை ஆண்டுகள் அப்டேட் கிடைக்கும் என்பதையும் பார்ப்பதன் மூலம் இந்த வலையில் இருந்து தப்பிக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Buying a new android dont fall for the system update trap