Chennai Tamil News: 2017ஆம் ஆண்டு, முதன் முறையாக ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் பெங்களூரில் உள்ள விஸ்ட்ரானின் தொழிற்சாலையில் ஆப்பிள் ஐபோன் SE உருவாக்கத் தொடங்கியது.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களை அசெம்பிள் செய்ய விஸ்ட்ரான், ஃபாக்ஸ்கான் மற்றும் பெகாட்ரான் ஆகிய மூன்று கூட்டாளர்களை தேர்ந்தெடுத்தது.

ஐபோன் ப்ரோ அல்லது ஐபோன் ப்ரோ மேக்ஸ் சீரிஸ் போன்ற எந்த ஒரு சிறந்த ஐபோன் வகைகளையும் ஆப்பிள் இன்னும் இந்தியாவில் தயாரிக்கவில்லை. மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் உள்நாட்டு விற்பனைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டில், ஐபோன் மாடலை சீக்கிரமே அசெம்பிள் செய்ய முடிவெடுத்துள்ளனர். 2025 ஆம் ஆண்டிற்குள் ஆப்பிள் தன் மொத்த ஐபோன் உற்பத்தியை 25 சதவீதத்திற்கு இந்தியாவில் மாற்ற விரும்புகிறது. ஐபோன் 14 உற்பத்தியை இந்தியாவில் தொடங்குவதால், இந்த இலக்கை அடைய அடையாளம் என்று தெரிவிக்கின்றனர்.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 ஐ இந்தியாவில் சென்னைக்கு அருகில் உள்ள (ஸ்ரீபெரும்புத்தூரில்) ஃபாக்ஸ்கான் ஆலையில் தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிக்கைகளின்படி, ஐபோன் 14 உள்ளூரில் உற்பத்தியானால் இந்திய அரசாங்கத்தின் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.ஐ.) திட்டத்தில் நேரடியான பிரதிபலிக்கப்படும் என்று கருதப்படுகிறது.
செப்டம்பர் மாதத்தில், ஐபோன் 14 இந்தியாவில் ரூ.79,900 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் இந்தியாவில் தயாரிக்கப்படும் போது விலை குறையுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
ஐபோன் 14 ஐ இந்தியாவில் தயாரிப்பதனால், ஆப்பிள் தயாரிப்பின் இறக்குமதி வரியில் 20 சதவீதத்தை சேமிக்க முடியும். இதனால் இந்த மாடலின் விலை குறையலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் உள்ளூர் சந்தைக்கான உலகளாவிய விலையை ஆப்பிள் குறைப்பது அரிதான ஒன்று. இதற்கு முன் வந்த, ஆப்பிள் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 ஆகிய வகைகள் உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட போதும் அவற்றின் விலைகளை அதிகாரப்பூர்வமாக குறைக்கவில்லை.
இருப்பினும், நிறுவனம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற மூன்றாம் தரப்பு தளங்களில் தள்ளுபடி சலுகைகளை வழங்க சில வங்கிகளுடன் சேர்ந்து பணியாற்றியது. இப்போது, இது ஐபோன் 14 க்கும் அதே போன்ற வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால், இதுவரை எதுவும் அப்படி உறுதி செய்யப்படவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil