செவித்திறன் முதல் இதயம் வரை.. அதிக டெசிபல் ஒலியால் மாரடைப்பு ஏற்படுமா?

வாகன இரைச்சல், கட்டுமான சத்தங்கள், விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் ஒலிக்கும் அதிக டெசிபல் இசைகள் எனப் பல ஒலிகள் நம்மைச் சூழ்ந்துள்ளன. ஆனால், இந்த ஒலிகள் வெறும் காது இரைச்சல் மட்டுமல்ல, அவை நம் ஆரோக்கியத்திற்கு, ஏன் உயிருக்கே கூட அச்சுறுத்தலாக அமையலாம்.

வாகன இரைச்சல், கட்டுமான சத்தங்கள், விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் ஒலிக்கும் அதிக டெசிபல் இசைகள் எனப் பல ஒலிகள் நம்மைச் சூழ்ந்துள்ளன. ஆனால், இந்த ஒலிகள் வெறும் காது இரைச்சல் மட்டுமல்ல, அவை நம் ஆரோக்கியத்திற்கு, ஏன் உயிருக்கே கூட அச்சுறுத்தலாக அமையலாம்.

author-image
WebDesk
New Update
high-decibel-sound

காதுகளுக்கு மட்டுமல்ல, உயிருக்கே ஆபத்து: அதிக டெசிபல் ஒலியால் மாரடைப்பு ஏற்படுமா?

அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சத்தத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வாகன இரைச்சல், கட்டுமான சத்தங்கள், விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் ஒலிக்கும் அதிக டெசிபல் இசைகள் எனப் பல ஒலிகள் நம்மைச் சூழ்ந்துள்ளன. ஆனால், இந்த ஒலிகள் வெறும் காது இரைச்சல் மட்டுமல்ல, அவை நம் ஆரோக்கியத்திற்கு, ஏன் உயிருக்கே கூட அச்சுறுத்தலாக அமையலாம் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

Advertisment

உலக சுகாதார நிறுவனம் (WHO) உட்படப் பல சுகாதார அமைப்புகள், அதிக டெசிபல் ஒலி மனித ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன என எச்சரிக்கின்றன. குறிப்பாக, மாரடைப்பு, செவித்திறன் இழப்பு ஏற்படும் அபாயம் குறித்து அவை சுட்டிக்காட்டுகின்றன. நீண்ட நேரம் அதிக ஒலிக்கு ஆளாவது, காது வலி அல்லது செவித்திறன் பாதிப்பை மட்டுமல்லாமல், நம் உடலின் பல முக்கிய உறுப்புகளையும் கடுமையாகப் பாதிக்கலாம்.

ஆபத்தான ஒலி அளவுகளும் அதன் விளைவுகளும்:

பொதுவாக, 70 டெசிபல் வரையிலான ஒலிகள் மனிதர்களுக்குப் பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன. ஆனால், இதைவிட அதிக சத்தம் மிகவும் ஆபத்தானதாகும்.

Advertisment
Advertisements
  • 85 டெசிபலுக்கு மேல்: இந்த ஒலி அளவு, நாம் தொடர்ச்சியாகச் சில மணிநேரங்கள் கேட்கும்போது, காலப்போக்கில் செவித் திறன் பாதிப்பு மற்றும் காது கேளாமைக்கு வழிவகுக்கும். சாலைகளில் செல்லும் பேருந்துகளின் ஒலி, தொழிற்சாலை இயந்திரங்களின் சத்தம் ஆகியவை இந்த வரம்பிற்குள் வரும்.

  • 120 டெசிபலுக்கு மேல்: மிகவும் ஆபத்தான அளவு. ராட்சச வெடிகளின் சத்தம், இடி போன்ற ஒலிகள் இந்த அளவை எட்டலாம். இந்த அளவு சத்தம் கடுமையான உடல்நலப் பாதிப்புகளையும், தலைசுற்றலையும் உண்டாக்கும்.

  • 100-110 டெசிபல்: இளைஞர்கள் மத்தியில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இயர்போன்கள் மற்றும் பிற இசை சாதனங்கள் முழு ஒலியில் இயக்கும்போது இந்த அளவை எட்டக்கூடும். இந்த ஒலியைத் தொடர்ந்து கேட்பது செவிப்புலனுக்கு மிகவும் ஆபத்தானதாகும்.

  • 185-200 டெசிபல்: மிகப்பெரிய வெடிப்புகள் அல்லது மிகக் கடுமையான அதிர்வுகள் இந்த அளவை எட்டும். இந்த அதிபயங்கரமான சத்தம் உடனடி மரணம், மாரடைப்பு அல்லது மூளை ரத்தக் கசிவை (brain hemorrhage) ஏற்படுத்தும் அபாயம் கொண்டது.

அதிக சத்தத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்:

திருமண நிகழ்வுகள், கோவில் விழாக்கள், டி.ஜே. பார்ட்டிகள் போன்ற கொண்டாட்டங்களில் ஒலி அளவு பெரும்பாலும் 100-120 டெசிபலை எட்டுகிறது. அதிக சத்தம் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து, இரத்த அழுத்தத்தை உயர்த்தும். இது மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். தொடர்ச்சியான சத்தம் மன அழுத்தத்தை அதிகரித்து, எரிச்சல், பதட்டம் மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். அதிக சத்தம், குறிப்பாக இரவில், ஆழ்ந்த தூக்கத்தைப் பாதிக்கும். இது தூக்கமின்மைக்கு வழிவகுத்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் சீர்குலைக்கும். நீண்டகால சத்தம் நினைவாற்றல் இழப்பு, கவனம் குறைதல் போன்ற அறிவாற்றல் செயல்பாடுகளை பாதிக்கலாம். குழந்தைகள், வயதானவர்கள், மற்றும் ஏற்கனவே இதய நோய்கள் அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் போன்றவர்கள் அதிக சத்தத்தால் மிக எளிதில் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு இது கடுமையான உடல்நலப் பிரச்னைகளை உருவாக்கலாம்.

சத்தத்திலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

சத்தத்தின் ஆபத்துகளைக் குறைத்து, நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம். முடிந்தவரை அதிக சத்தம் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமானப் பகுதிகள் (அ) மிகவும் சத்தமான நிகழ்வுகளைத் தவிர்க்கவும். இயர்போன்கள் (அ) ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்தும் போது, ஒலியளவை 60% க்குக் குறைவாக வைத்திருக்கவும். நீண்ட நேரம் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். டி.ஜே. சவுண்ட் சிஸ்டம் அல்லது பெரிய ஒலிபெருக்கிகள் உள்ள இடங்களில் இருந்து முடிந்தவரை பாதுகாப்பான தூரத்தில் நிற்கவும். சத்தம் அதிகமாக இருக்கும் பணியிடங்களில் பணிபுரிபவர்கள் காது செருகிகள் (earplugs) அல்லது காது மஃப் (earmuffs) போன்ற செவிப்புலன் பாதுகாப்பு கருவிகளைப் பயன்படுத்தலாம். ஏதேனும் செவித்திறன் இழப்பு, காதுகளில் இரைச்சல் (tinnitus), அல்லது தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.

அதிக டெசிபல் ஒலிகள் வெறும் ஒலிபெருக்கிகள் உருவாக்கும் சத்தம் மட்டுமல்ல, அவை நம் ஆரோக்கியத்திற்கும் உயிருக்கும் அச்சுறுத்தல் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். அமைதியான சூழலை உருவாக்குவதும், சத்தத்தைக் கட்டுப்படுத்துவதும் நம் தனிப்பட்ட மற்றும் சமூக ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாகும்.

Science Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: