Advertisment

வினை தந்திரம் கற்போம் : டிஜிட்டல் மார்கெட்டிங்கில் நவீன தொழில்நுட்பங்கள்!

டிஜிட்டல் மார்க்கெட்டிங் ( Digital Marketing ) என்றால் என்ன? அது எப்படி உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த உதவுகிறது என்பதை இந்த கட்டுரை விவரிக்கிறது.

author-image
WebDesk
Aug 11, 2018 06:00 IST
Digital Marketing, augmented-reality

இப்போது டிஜிட்டல் மார்க்கெட்டிங் ( Digital Marketing ) யுகம். சந்தைப்படுத்தும் யுக்திகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே வந்திருக்கிறன்றன. அதுவும் இந்த டிஜிட்டல் யுகத்தில், சோஷியல் மீடியா, SEO, மற்றும் பிற இன்டர்நெட் மார்க்கெட்டிங் வியூகங்கள் தவிர்க்க முடியாதவை. உதாரணத்திற்கு உங்களுடைய ப்ரொடக்ட் 'பருப்பை’ விற்பதாக இருந்தாலும் கூட.

Advertisment

டிஜிட்டல் மார்கெட்டிங் ( Digital Marketing ) :

எல்லாருக்கும் பொதுவான ஒரு விளம்பரம் ( advertisement ) மூலம் மார்க்கெட்டிங் செய்வது ஹைதர் கால யுக்தி. டார்கெட்டட் மார்க்கெட்டிங் எனப்படுகிற, சரியான கஸ்டமரிடம் சரியான நேரத்தில் (context) கொண்டு செல்வதுதான் கூடுதல் பயனுள்ள முறையாக இருக்கிறது. இது, செய்தித்தாள், FMCG எனப்படும் நுகர் பொருட்கள், வலைப்பூ ட்ராஃபிக், பேஷன் பொருட்கள், அரசியல் கட்சி பிராண்டிங், புத்தகம், சேவை (Services), சுற்றுலா, ஹோட்டல் என எல்லா சந்தைப் பொருட்களுக்கும் பொருந்தும்.

உதாரணமாக, உங்கள் ஆர்கானிக் பருப்பை சந்தைப் படுத்த விரும்புகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். ஒருவர் ஆரோக்கிமான உணவு முறைகள் பற்றி சோஷியல் மீடியாவிலோ, ஈமெயிலிலோ ஒரு நண்பரிடம் பேசுகிறார்.

அவருடைய வாங்கும் நடவடிக்கை (buying behaviour) முதலான தகவல்களை சேகரிக்க வேண்டும். (இவ்வாறு சேகரிக்க பல apps மற்றும் tools உள்ளன). இவ்வாறு திரட்டிய தகவல்கள் மூலம், சரியான வாடிக்கையாளரை சரியான சமயத்தில் அணுகி உங்கள் பொருளை சந்தைப் படுத்தவேண்டும். இது டார்கெட்டட் மார்க்கெட்டிங்கின் (Contextual Targeting Strategy) ஓர் உதாரணம். பொது நுகர்வோர், ஒரு போது செய்தியைப்பற்றியோ, கட்டுரை அல்லது ஒரு பிராண்ட் பற்றியோ சமூக வலைத்தளங்களில் விவாதிக்கிறார்கள்; அல்லது அவர்களுடைய தனி நிகழ்வுகளை புகைப்படங்களுடன் பதிவிடுகிறார்கள்.

இது மார்க்கெட்டர்களுக்கு அருமையான வாய்ப்பு; அந்த உரையாடல்களில் கலந்து கொள்வதன் மூலம் உங்கள் பிராண்ட்க்கான அவர்நெஸ் (Brand Awareness) உருவாக்க முடியும்; அல்லது புதிய உரையாடலை உருவாக்குவதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களையே மார்க்கெட்டிங்குக்கு பயன்படுத்தவும் முடியும். இந்த உரையாடல்களில் கூகிள் அஸ்ஸிஸ்டண்ட், அமேசான் அலெக்சா இவைகளுடன் நிகழ்த்தும் Voice உரையாடல்களும் அடக்கம். இந்த voice உரையாடல்களிலிருந்து தகவல் திரட்டுவது சவாலான விஷயம்தான்.

"என்ன? நான் என் நண்பருடன் தனிப்பட்ட முறையில்தானே Organic பற்றி சாட் செய்து கொண்டிருந்தேன்? அதெப்படி மார்கெட்டருக்கு தெரியும்?" என்று கேட்பீர்களேயானால், இது "என்ன? இந்திரா காந்தி இறந்து விட்டாரா?" என்று கேட்பதற்கு சமம்.

இணையத்தில் நீங்கள் பதிவிடுகிற அல்லது விவாதிக்கிற ஒவ்வொரு தகவலும், உங்கள் சம்மதத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெற்று பகிரப்படுகிறது என்பது மிகப் பழைய செய்தி.

விஷயத்துக்கு வருவோம்; சோஷியல் மீடியா மற்றும் இணைய மார்க்கெட்டிங்கில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய யுக்திகள் பற்றி விவாதிப்போம். (பருப்பு வாங்கினால் பாஸ்போர்ட் இல்லாம ஃபாரீன் போகிற மார்க்கெட்டிங் யுக்தி பற்றி விவாதிப்பது இந்த கட்டுரையின் நோக்கமல்ல.)

Augmented Reality-உடன் ஒருங்கிணைக்கப்பட்ட சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்:

நீங்கள் சிவில் ஆர்க்கிடெக்ட் என்று வைத்துக்கொள்வோம்; உங்கள் விசிட்டிங் கார்டை ஒருவருக்கு நீட்டுகிறீர்கள். அந்த கார்டிலிருந்து நீங்கள் வடிவமைத்த "மாதிரி இல்லங்கள்" உயிர்த்தெழுந்து வருகின்றன. இது Augmented Reality -யால் சாத்தியப்படும் அதிசயங்களில் ஒன்று.

ஜிம் மிற்கு செல்கிறீர்கள். உங்களுக்கு சற்று முன் அங்கு வந்திருந்த உங்கள் நண்பர், அங்கிருக்கும் ஓர் உபகரணத்தின் மீது சோஷியல் வலைதளம் மூலம் ஒரு குறிப்பை ஒட்டி வைத்துச் சென்றிருக்கிறார் "இன்று 135 கலோரிகள் குறைத்திருக்கிறேன்; நீ இதை வென்று காண்பி பார்ப்போம்" . இதுவும் Augmented Reality யே.

அடுத்து வழக்கமாக செல்லும் ஒரு காஃபி ஷாப் செல்கிறீர்கள்; அங்கு ஒரு கேக்-இன் மீது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியுடன் (சோஷியல் மீடியா மூலம் உங்கள் நண்பரால் பகிரப்பட்ட செய்தி) மற்றும் உங்களுக்குத் பிடித்தமான காஃபியும் உங்கள் நண்பரால் அன்பளிப்பு செய்யப்பட்டு காத்திருக்கின்றன. இவ்வாறு ஒரு பொருளின் மீது அமர்ந்திருக்கும் சோஷியல் வலை குறிப்பு, Augmemnted Reality ம் சோஷியல் மீடியாவும் ஒருங்கிணைக்கப்பட்டதன் பயன். இதனை உங்கள் பொருள் அல்லது சேவையின் மார்கெட்டிங்குக்கு, பயன்படுத்துவது ஒரு புதிய ட்ரெண்ட்.

ரிச் மீடியா அஸெட்ஸ் (Rich Media Assets):

காணொளி (Videos), ரிச் மீடியா அஸெட்ஸில் ஓர் அங்கம். Videos இணைய உலகில் அசுரத்தனமான வளர்ச்சியை சந்திக்கப் போகிறதென ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஃபேஸ்புக் லைவ் வீடியோ, இன்ஸ்டாகிராம் ஸ்டோரி, யூடியூப் உள்ளிட்டவை மூலம் மார்கெட்டிங் செய்வது பயனளிக்கும்.

கலாமின் கனவு என்ன?

நுண்ணறிவாற்றல் (Artificial Intelligence) நவீன மார்கெட்டிங்கில் அதி முக்கியமான பங்கை வகிக்கிறது. நுகர்வோரின் நடவடிக்கைகள் (Consumer Behavior), தேடல் பாங்கு (Search Pattern) மற்றும் பல சமூக வலைதளைகளிடமிருந்து திரட்டப்படும் தகவல்களை ஆராய்ந்து, நுகர்வோர் தங்களுக்கு தேவையான பொருட்களையோ, சேவைகளையோ எவ்வாறு கண்டடைகிறார்கள் என்பதைக் கண்டறிந்து மார்க்கெட்டர்களுக்கு தெரிவிப்பதில் AI பெரிதும் உதவுகிறது.

Paid Campaign:

Google AdWords, Facebook paid ads, display marketing, Affliate Marketing என்று டிஜிட்டல் மார்கெட்டிங்கில் பல வழிகள் உண்டு. உதாரணமாக ஃபேஸ்புக் மார்கெட்டிங் நுட்பங்களில் சிலவற்றை சுருக்கமாக பார்ப்போம்.

ஃபேஸ்புக் விளம்பரங்கள்: டெமோகிராஃபிக்கிற்கு (Demogrpahy) தகுந்தவாறு விளம்பரங்கள் அமைத்து நமக்கான பட்ஜெட்டையம் தீர்மானித்து, விளம்பரங்களின் செயல்பாட்டையும் அளவிட முடியும் என்பது இவற்றின் சிறப்பு. ஃபேஸ்புக் போட்டிகள், போஸ்ட் ப்ரோமோஷன், Sponsored Stories, ஓபன் க்ராஃப் என ஃபேஸ்புக் மார்கெட்டிங் யுக்திகள் பல உண்டு.

Paid மார்க்கெட்டிங் நுட்பங்கள் ஒருபுறமிருக்க, ஆர்கானிக் search (unpaid) மூலமாகவே தமது தளங்களுக்கான டிராஃபிக்கை அதிகப்படுத்த பயன்படுத்தும் தொழில்நுட்பம்தான் SEO எனப்படும் Search Engine Optimization. SEO பற்றிய தகவல்களும், புத்தகங்களும், படிப்புகளும் ஏராளமாக இருக்கின்றன. இதன் அடுத்த கட்டம் Mobile SEO.

மொபைல்களின் தாக்கம்

Mobile SEO பற்றி விவாதிக்கும் முன்னர், சில புள்ளிவிவரங்கள்:

2018-ல் உலகளாவிய மொத்த இன்டர்நெட் ட்ராஃபிக்கில், 51.2 சதவிகிதம் மொபைல் ட்ராஃபிக்.

உலகளாவிய மொபைல் இன்டர்நெட் ட்ராஃபிக்கின் வளர்ச்சி 2016-லிருந்து 2021 க்குள் ஏழு மடங்காக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

ஜனவரி 2018-ல் உலகளாவிய மொபைல் உபயோகிப்பவர் எண்ணிக்கை 3.7 பில்லியனை எட்டியது

இதிலிருந்து மொபைல் இன்டர்நெட் மார்க்கெட்டிங் வியூகங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது தெரிகிறது.

முதலில் மூன்று வகையான மொபைல் வலைத்தளங்களைப் பற்றி பார்ப்போம்:

1) இணையதள வலைத்தளத்திற்கும், மொபைல் வலைத்தளத்திற்கும் தனித்தனி URLs

2) டைனமிக் செர்விங்

3) ரெஸ்பான்சிவ் டிசைன்

முதல் வகையில், இரு URL-களும், ஸ்க்ரீன் அளவுக்கு தகுந்தபடி, வலைத்தளத்தை காண்பிக்கும் வண்ணம், தனித்தனி HTML code ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கும்.

ஒரே URL, சாதனத்தின் (டெஸ்க்டாப், மொபைல் அல்லது டாப்லெட்) ஸ்க்ரீன் அளவுக்கு தகுந்தபடி, சர்வர் தனித்தனி HTML/CSS டிஸ்பிளே தருவதுதான் டைனமிக் செர்விங்.

ரெஸ்பான்சிவ் டிசைனில், ஒரே URL -ல் ஒரே HTML code உள்ளடக்கம். இருந்தாலும், source code-ல் meta name="viewport" tag சேர்ப்பதன் மூலம் இன்டர்நெட் பிரௌஸர் தாமாகவே அட்ஜஸ்ட் செய்து கொள்ளும். இதன் மூலம் பயனரின் ஸ்க்ரீன் அளவுக்கு தகுந்தபடி display செட்டிங் மாற்றிக்கொள்ளும்.

இந்த மூன்றிலும் ரெஸ்பான்சிவ் டிசைன் முறையில் பயன்கள் அதிகம்.

Mobile SEO:

முதலில் SEO என்றல் என்ன என்பதை எளிய மொழியில் சொல்வதென்றால், ஓர் இணையதளத்தை, தேடல் எந்திரங்கள் ஆர்கானிக் முறையில் (unpaid) எளிதாக கண்டறிந்து வழங்க வேண்டி, அந்த தளத்தை தயார் செய்யும் வழிமுறை தான் SEO எனப்படும் Search Engine Optimization.

Digital Marketing

மொபைலின் பக்கங்களையும் இவ்வாறு SEO செய்து, தயார் செய்ய வேண்டிய அவசியத்தை மொபைல் இணைய பயன்பாட்டின் பிரம்மாண்ட வளர்ச்சி உணர்த்துகிறது.

மொபைல் SEO பற்றி சில குறிப்புகள்:

மொபைல் பக்கங்கள் தோன்றும் வேகம்: மொபைல் நெட்ஒர்க் அத்தனை வலுவானதல்ல; வேகம் குறைவு. இதனையும் கருத்தில் கொண்டு, இருந்தாலும் மொபைல் பக்கங்கள் விரைவாக தோன்ற வேண்டும் என்ற அளவுக்கு டிசைன் செய்ய வேண்டும்.

உங்கள் மொபைல் பக்கத்தில் CSS, JavaScripts பயன்படுத்துவதாக இருந்தால், inline CSS, JavaScripts பயன்படுத்த வேண்டும். மற்ற உட்பொருட்களை மறைக்காத வண்ணம், பக்கத்தின் கீழ் பகுதியில் பயன்படுத்த முடிந்தால் நல்லது.

மொபைல் பக்கத்தில் பல லின்க்ஸ் அல்லது URL-கள் இருக்குமென்றால், அவை ரீ-டைரக்ட் செய்யும்போது சரியான மொபைல் தளத்திற்கு இட்டுச் செல்கிறதா என உறுதி செய்துகொள்ளவேண்டும்.

ஒரு வலை பக்கத்தில் படங்கள் (Images) இடம் பெறுவதை தவிர்க்க முடியாது. ஆனால் படங்கள் மொபைல் பக்கங்களில் தோன்றுவதற்கு தாமதமாக வாய்ப்பு இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும். இதனால் கூடியவரை கனமான இமேஜ் ஃபைல்களை தவிர்க்க முயலவேண்டும்.

Pop-up மற்றும் Plug-in இவை மொபைல் பக்கங்களில் இடம் பெறுவதை தவிர்க்க வேண்டும்.

அதே போல் மொபைல் பக்கங்களில் வீடியோக்களை இடம் பெறச் செய்யவேண்டியிருந்தால், HTML 5 பயன்படுத்துவது நல்லது.

Contextual டார்கெட்டிங் வியூகங்கள்:

பொத்தாம்பொதுவான விளம்பரங்களை வெளியிடாமல் Context அறிந்து, சரியான விளம்பரங்களை அளிப்பதுதான் இப்போதைய ட்ரெண்ட். ஒவ்வொரு வலை பக்கமும் எதை பற்றியது என்பதை அறிந்து, அதன் பார்வையாளர்கள் எத்தகையவர்கள் என கணித்து அதற்கு தகுந்தாற்போல் விளம்பரம் கொடுப்பது contextual டார்கெட்டிங்கிற்கு ஓர் உதாரணம்.

போட்டி நிறைந்த இந்த காலகட்டத்தில், நம்முடைய போட்டியாளர்களை விட சிறந்த முறையில் நம் பொருட்களை சந்தை படுத்தவேண்டுமெனில், புதிய தொழில்நுட்பங்களை கையாண்டு, புதுமையான வியுகங்களை அமைப்பது மிகவும் அவசியமாக இருக்கிறது.

மகேஷ் கேசவப்பிள்ளை

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment