scorecardresearch

TikTok Ban: இந்தியாவைத் தொடர்ந்து இந்த நாட்டில் டிக்டாக் தடை.. காரணம் என்ன?

சீனாவின் டிக்டாக் செயலிக்கு கனடா தடை விதித்துள்ளது.

Tiktok ban in England
டிக் டாக் செயலிக்கு இங்கிலாந்து தடை

இந்தியாவைத் தொடர்ந்து, சீனாவின் டிக்டாக் செயலிக்கு கனடா அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தனி உரிமை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக நடவடிக்கை என கனடா அரசு விளக்கம் அளித்துள்ளது. இதில் ரிஸ்க் மற்றும் பல அபாயங்கள் இருப்பதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சீனாவுக்குச் சொந்தமான டிக்டாக் செயலி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலி சீன நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதாலும், பயனர் தரவுகளை சீன அரசாங்கம் பயன்படுத்தலாம் என்ற நோக்கிலும் இந்த செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கனடா மக்களின் ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று கூறியுள்ளது. கனேடியர்களுக்கான ஆன்லைன் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசாங்கம் எடுக்கும் பல நடவடிக்கைகளில் இந்தத் தடை முதன்மையானதாக உள்ளது. அரசு அலுவலர்கள் செல்போனில் டிக்டாக் செயலி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டிக் டாக்கிற்கு தடை விதிப்பதாக திங்கட்கிழமை அறிவித்தார். இது ஒரு முதல் படி என்று அவர் கூறினார். மேலும் தடை உடனடியாக அமலுக்கு வரும். எதிர்காலத்தில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாது என்றும் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Canada govenment banned tiktok over national security reasons