Advertisment

கெனான் நிறுவனத்தின் முதல் மிரர்லெஸ் ஃபுல் ஃப்ரேம் கேமரா EOS R ஒரு அறிமுகம்

மோட் டயல் மற்றும் கஸ்டம் ஃபங்ஷன் பட்டன்கள் என எதுவும் இந்த கேமராவில் இல்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கெனான் மிரர்லெஸ் கேமரா EOS R, கெனான் மிரர்லெஸ் கேமரா EOS R விலை, EOS R Price, EOS R review,

கெனான் மிரர்லெஸ் கேமரா EOS R

கெனான் மிரர்லெஸ் கேமரா EOS R : கெனான் கேமராவின் முதல் ஃபுல் ஃப்ரேம் மிரர்லெஸ் கேமராவினை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது. சோனி மற்றும் நிக்கான் போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள் மிக நீண்ட நாட்களுக்கு முன்பே ஃபுல் ஃப்ரேம் மிரர்லெஸ் கேமராவினை வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஆனால் கெனான் தற்போது தான் தன்னுடைய முதல் ஃபுல் ஃப்ரேம் கேமராவை வெளியிட்டிருக்கிறது.

Advertisment

கெனான் நிறுவனம் புகைப்படக் கலையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்ற நிறுவனம். அவர்களின் ஃபுல் ஃபேரேம் மிரர்லெஸ் கேமராமின் வருகைக்காக பலரும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

சில நாட்களுக்கு முன்பு டோக்கியோவில் இருந்து கெனான் தன்னுடைய இந்த கேமராவினை வெளியிட்டத்து. இந்தியாவில் 21ம் தேதி (21/09/2018) அன்று இந்தியாவில் இந்த கேமராவினை அறிமுகம் செய்தது கெனான் நிறுவனம்.

கெனான் மிரர்லெஸ் கேமரா EOS R சிறப்பம்சங்கள் என்னென்ன?

மற்ற டி.எஸ்.எல்.ஆர் கேமராவினைப் போல் தான் இந்த மிரர்லெஸ் கேமராவும் இருக்கிறது. நல்ல க்ரிப்பினை கொண்ட இந்த கேமரா உபயோகத்திற்கும் மிக எளிமையாக இருக்கிறது. இதனுடைய உதிரி பாகங்கள் யாவும் மெக்னீசியம் அல்லாய் மற்றும் உயர்தர ப்ளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்டிக்கிறது. இந்த கேமராவுடன் சில ஆஃர்.எஃப் லென்ஸ்களையும் அறிமுகப்படுத்தியிருந்தது இந்நிறுவனம்.,

தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு செயல்படக்கூடிய இந்த கேமரா வெதர் ப்ரூஃப்பும் கூட. காடுகளுக்குள் மற்றும் மழைக்காலங்களில் புகைப்படம் எடுக்க மிகவும் ஏற்ற தயாரிப்பாக இது இருக்கலாம்.

இந்த கேமராவில் மைக்ரோ எச்.டி.எம்.ஐ கேமரா மற்றும் யூ.எஸ்.பி டைப் சி போர்ட், ஹெட்போன் மற்றும் மைக்கிற்கான சாக்கெட்டுகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த ஈ.ஓ.எஸ் ஆர் கேமரா. இதில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட கூடியது நீங்கள் உங்கள் கேமராவின் பேட்டரியை தனியாக எடுத்து சார்ஜ் போட்டு நேரத்தை வீணாக்காமல் நேரடியாக சார்ஜ் போட்டுக் கொள்ளலாம்.

எல்.சி.டி டச் பேனல்

3.15 இன்ச் எல்.சி.டி டச் பேனலுடன் வருகிறது இந்த கேமரா. இதன் ரெசலியூசன் என்பது சுமார் 2.1 மில்லியன் டாட்களாகும். எலெக்ரிக் வியூ பாய்ண்ட்டர் பயன்படுத்தும் போது சரியான ஃபோக்கஸ் பாய்ண்ட்டினை தேர்ந்தெடுக்க இந்த எல்.சி.டி திரை பயன்படுகிறது.

மோட் டயல் இல்லாமல் வெளியான ஈ.ஓ.எஸ். ஆர்

இந்த கேமராவின் மொத்த உள்கட்ட அமைப்பும் முந்தைய கேமராக்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

முன்பு வெளியான அனைத்து டி.எஸ்.எல்.ஆர் கேமராவிலும் காணப்பட்ட மோட் டயல் இந்த கேமராவில் இல்லை. அதற்கு பதிலாக மோட் பட்டனை தேர்வு செய்து திரையில் என்ன மோட் தேவைப்படுமோ அதை தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். மோட் டயல் இல்லாதது போலவே கஸ்டம் ஃபங்ஷன் பட்டன்களும் இந்த கேமராவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஃபோர் வே ஜாய்ஸ்டிக் இல்லாமல் இருப்பது ஒரு குறையாகவே இருக்கலாம். ஆனால் அனைத்து செட்டிங்ஸ்களையும் டச் பேட் மூலமாக மிக எளிதில் மாற்றிக் கொள்ள இயலும்.

ஆர்.எஃப் லென்ஸ் (Rear focus Lens )

EOS R கேமராவுடன் 4 ஆர்.எஃப் மௌண்ட் லென்ஸ்களையும் வெளியிட்டிருக்கிறது கெனான் நிறுவனம். கெனான் 50 mm லென்ஸ் மிகவும் பெரியதாகவும் அதிக எடைக் கொண்டதாகவும் இருந்தது. இதனுடன் வெளியான லென்ஸ்களில் 24-105mm லென்ஸ், 35mm f/1.8 மேக்ரோ லென்ஸ் மற்றும் 28-70mm f/2 ஜூம் லென்ஸ்ஸும் அடங்கும். இதில் அதிக எடையும் மிக பெரியதுமான லென்ஸ் 28-70mm f/2 ஜூம் லென்ஸ்தான்.

கெனான் மிரர்லெஸ் கேமரா EOS R, RF lenses, கெனான் மிரர்லெஸ் கேமரா EOS R

இதர சிறப்பம்சங்கள்

30.3 மெகா பிக்சல் ஃபுல் ப்ரேம் கேமரா இது. கெனான் டிஜிக் 8 இமேஜ் பிராசஸ்ஸர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 5,655 செலக்டபல் ஏ.எஃப். பாய்ண்ட்டுகள் உள்ளன. வை-பை மற்றும் ப்ளூடூத் மூலமாக புகைப்படங்களை தரவிறக்கம் செய்து எடிட் செய்து கொள்ளலாம்.

விலை மற்றும் விற்பனை

இந்த கேமராவின் விலை ரூ. 1,89,950 (body-only). இதனுடன் RF24-105mm f/4L IS USM Lens - னையும் சேர்த்து வாங்கும் போது இதன் விலை ரூபாய் 2,78,945 ஆகும். வருகின்ற அக்டோபர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது இந்த கேமரா.

Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment