Advertisment

தனிப்பட்ட தகவல்கள் திருட்டு: சி கிளீனர் பயனர்களுக்கு அதிர்ச்சி

CCleaner: பெயர், மொபைல் எண்கள் மற்றும் பில்லிங் தகவல்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடியதை சி கிளீனர் நிறுவனம் தெரிவித்துள்ளது

author-image
WebDesk
New Update
 CCleaner.jpg

சி கிளீனர்  உலகளவில் மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்ட பிரபலமான விண்டோஸ் பயன்பாடு, தரவு மீறலால் பாதிக்கப்பட்டதாக சமீபத்தில் அந்த  நிறுவனம் உறுதிப்படுத்தியது. வாடிக்கையாளர்களின் பெயர்கள், தொடர்பு எண்கள் மற்றும் பில்லிங் தகவல் போன்ற தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடியதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக சி கிளீனரின் தாய் நிறுவனமான ஜென் டிஜிட்டல் (Gen Digital) தனது வாடிக்கையாளர்களுக்கு இ-மெயில் மூலம் தெரியப்படுத்தியது.  

Advertisment

ஜென் டிஜிட்டல்  கூற்றுப்படி, ஹேக்கர்கள் MOVEit மூலம் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளனர். இது இணையத்தில் பெரிய அளவிலான தரவை மாற்ற உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் கோப்பு பரிமாற்றக் கருவியாகும். இருப்பினும், வங்கி விவரங்கள், கிரெடிட் கார்டு எண்கள் மற்றும் உள்நுழைவு தகவல் போன்றவைகள் பாதிக்கப்படவில்லை என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜென் டிஜிட்டல் செய்தித் தொடர்பாளர் ஜெஸ் மோனி கூறுகையில், 2 சதவீதத்திற்கும் குறைவான பயனர்களின் தரவுகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் பற்றி விவரங்களை நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை என்று கூறினார்.  

இந்த பாதிப்பு, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கணினிகளில் இருந்து முக்கியமான தரவைத் திருட Clop ransomware ஐ அனுமதித்தது, ஆனால் ransomware இன் டார்க் வெப் இணையதளம் CCleanerஐ இன்னும் பட்டியலிடவில்லை.

உலகம் முழுவதும் 65 மில்லியனுக்கும் அதிகமான பேர் சி கிளீனரை கட்டணம் செலுத்தி பயன்படுத்துவதாக ஜென் டிஜிட்டல் கூறியுள்ளது. CCleaner தவிர, ஜென் டிஜிட்டல் Avira, Avast மற்றும் NortonLifeLock போன்ற இணைய பாதுகாப்பு நிறுவனங்களையும் கொண்டுள்ளது.

CCleaner தயாரிப்பாளர்கள் மின்னஞ்சலில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 6 மாதங்களுக்கு இலவச ப்ரீச்கார்டை வழங்குவதாக தெரிவித்தனர், இது தரவு மீறல்களை டார்க் வெப் கண்காணித்து, உங்கள் தனிப்பட்ட தகவலை யாராவது விற்பனை செய்கிறார்களா என்று தெரிவிக்கும் ஒரு பயன்பாடாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment