Advertisment

சமூக ஊடகங்களுக்கு எதிராக பயனர் புகார்: மத்திய அரசு 3 உயர்மட்ட குழுக்கள் அமைப்பு

சமூக ஊடக தளங்களுக்கு எதிராக பயனர்கள் தெரிவிக்கும் புகார்களை விசாரித்து தீர்வு காண மத்திய அரசு 3 குழுக்களை உருவாக்க அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Twitter

Twitter

சமூக ஊடகங்கள் மற்றும் பிற இணையம் சார்ந்த தளங்களுக்கு எதிராக பயனர்கள் தெரிவிக்கும் புகார்களை விசாரித்து தீர்வு காண மத்திய அரசு 3 குழுக்களை (Grievances appellate committees (GACs)) உருவாக்க அறிவித்துள்ளது. இந்த இயங்குதளங்கள் மூலம் எடுக்கப்படும் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துதல் தொடர்பான முடிவுகளை மேற்பார்வையிடவும் திரும்பப்பெறவும் இந்த பேனல்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும்.

Advertisment

கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், 3 குழுக்களில் ஒவ்வொன்றிலும் ஒரு தலைவர் மற்றும் அரசு நிறுவனங்களில் வெவ்வேறு துறையில் இருந்து இரண்டு முழுநேர உறுப்பினர்கள் இடம்பெறுவர். தொழில்துறையிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த நிர்வாகிகள் இடம்பெறுவர். 3 வருட காலம் இவர்களில் பதவியில் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 குழுக்கள் - உறுப்பினர்கள் நியமனம்

முதல் குழுவிற்கு உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தலைமை செயல் அதிகாரி தலைமை தாங்குவார். ஓய்வு பெற்ற இந்தியக் காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரி அசுதோஷ் சுக்லா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) முன்னாள் தலைமை பொது மேலாளரும், தலைமை தகவல் அதிகாரியுமான சுனில் சோனி ஆகியோர் குழுவின் முழு நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாவது குழுவிற்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கொள்கை மற்றும் நிர்வாகப் பிரிவு இணைச் செயலாளர் பொறுப்பு அதிகாரி தலைவராக செயல்படுவார். இந்திய கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரி சுனில் குமார் குப்தா மற்றும் எல்&டி இன்ஃபோடெக் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் கவீந்திர சர்மா ஆகியோர் இந்தக் குழுவின் முழு நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூன்றாவது குழுவுக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூத்த விஞ்ஞானி கவிதா பாட்டியா தலைமை தாங்குவார். இந்திய ரயில்வேயின் முன்னாள் போக்குவரத்து சேவை அதிகாரி சஞ்சய் கோயல் மற்றும் ஐடிபிஐ இன்டெக் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணகிரி ரகோதமராவ் ஆகியோர் மூன்றாவது குழுவின் முழு நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

2 வகையான பிரச்சனைகள்

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், இந்த குழு 2 வகையான பிரச்சனைகளை கையாள்வர். ஒன்று சட்டம் மற்றும் பயனர்களின் உரிமைகளை மீறுதல், பேச்சு சுதந்திரம் மற்றும் தனியுரிமை. இரண்டாவது, சமூகவலைதளத்தின் வழிகாட்டுதல்களுக்கும் பயனருக்கும் இடையே ஏதேனும் மோதல் ஆகியவைகளை கையாளும்.

“பயனர்களின் முறையீடுகளை கையாளத் தொடங்குவதற்கு சுமார் 30 நாட்களுக்கு முன்பு நாங்கள் GAC களுக்கு வழங்குவோம், இதனால் அனைத்து தளங்களும் தங்கள் குறைகளை பதிவு செய்யத் தொடங்கலாம் மற்றும் பயனர்கள் எழுப்பும் 100 சதவீத புகார்களுக்கு பதிலளிக்கலாம், இதனால் மேல்முறையீடு செய்யப்படும் போது GAC களைக் கொண்ட ஒரு பயனரால், அவர்கள் அதை எளிதாகத் தேடி அதைத் தீர்க்க முடியும்” என்று சந்திரசேகர் மேலும் கூறினார்.

3 குழுக்களும் ஒருவருக்கொருவர் எவ்வாறு புகார்களை பிரிக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த சந்திரசேகர், "அவர்கள் முன்னோக்கி சென்று கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார். தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதித்துவம் உள்ள குழு அல்லது இதுபோன்ற பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு சமாளிக்கும் திறன் கொண்டவர்கள் செயல்படுவர். குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விஷயமாக இருந்தால், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிபுணர்கள் அல்லது தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) அதிகாரிகளை அணுகுவது நல்லது " என்று கூறினார்.

தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறுகையில், இந்த ஜி.ஏ.சிக்கள் குழு தொழில்நுட்பத் துறை கட்டுப்பாட்டாளரின் ஒரு பகுதியாக செயல்படும். தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000க்கு அடுத்தபடியாக வரவிருக்கும் டிஜிட்டல் இந்தியா மசோதாவின் கீழ் அமைச்சகம் இதை பரிந்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Union Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment