Advertisment

ஆப்பிள் வாட்ச் பயன்படுத்துறீங்களா? உடனே இதைப் பண்ணுங்க...அரசு எச்சரிக்கை!

ஆப்பிள் வாட்ச் பயனர்கள் watchOS 8.7 அல்லது அதற்கு முந்தைய வெர்ஷன் ஓஎஸ் பயன்படுத்துபவர்கள் உடனடியாக புது மென்பொருளுக்கு அப்டேட் செய்யுமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
smart watch 1 - unsplash (1)

ஆப்பிள் வாட்ச் பயனர்கள் watchOS 8.7 அல்லது அதற்கு முந்தைய வெர்ஷன் ஓஎஸ் பயன்படுத்துபவர்கள் உடனடியாக புது மென்பொருளுக்கு அப்டேட் செய்யுமாறு The Indian Computer Emergency Response Team (CERT-In) அறிவுறுத்தியுள்ளது. பழைய வெர்ஷன் வாட்ச் மாடல்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

கிட்டத்திட்ட ஹேக்கிங் போன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகிறது. ஃபிட்னஸ் தகவல்கள், குறுஞ்செய்தி, வங்கி தொடர்பான விவரங்கள் கூட திருடப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆர்வத்தை தூண்டும் குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி ஹேக் செய்யப்படுகிறது. சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்தி வந்தால் தவிர்த்துவிடவும். ஹேக் செய்யப்பட்டால் உங்கள் வாட்ச் அவர்கள் கட்டுப்பாட்டில் சென்றுவிடும்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஆப்பிள் வாட்ச் பயனர்கள் உடனடியாக சமீபத்திய ஓஎஸ்ஸிற்கு வாட்ச்சை அப்டேட் செய்ய வேண்டும்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மற்றும் அதற்கு மேல் உள்ள மாடலில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

எப்படி ஆப்பிள் வாட்ச் அப்டேட் செய்ய வேண்டும்?

உங்கள் ஆப்பிள் வாட்ச் அப்டேட் செய்யும் போது குறைந்தது 50 சார்ஜ் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வைஃபை இருக்க வேண்டும். பின், வாட்ச்சில் உள்ள செட்டிங்ஸ் மெனுவிற்கு சென்று, General/ Software Update பகுதிக்கு செல்லவும். அங்கு அப்டேட் என்று கொடுக்கப்பட்டிருந்தால், அதை கிளிக் செய்து அப்டேட் கொடுங்கள். General/ Software Update பகுதியில் அப்டேட் என்று கொடுக்கப்படவில்லை என்றால் கவலை வேண்டாம். நீங்கள் புது வெர்ஷன் ஓஎஸ்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Technology Central Government Apple Smartwatch
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment