சி.இ.எஸ். 2018 விழா: கோ ப்ரோ ஃப்யூஷன் கேமரா, லெனோவா லேப்டாப் அறிமுகம்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறும் சி.இ.எஸ். 2018 விழாவின் இரண்டாம் நாளான இன்று (வியாழக்கிழமை) பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறும் சி.இ.எஸ். 2018 விழாவின் இரண்டாம் நாளான இன்று (வியாழக்கிழமை) பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

கோ ப்ரோ கேமரா:

கோ ப்ரோ தனது புதிய கேமராவை இந்த விழாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த கேமராவுடன் ஸ்டாண்ட், ஒவர் கேப்ச்சர் சாஃப்ட்வேர், வீ.ஆர்.கேமரா, உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

லெனோவா வைட்டல் மோட்டோ மாட்:

இந்த புதிய மோட்டோ மாட் மூலம், உங்கள் உடலின் ரத்த அழுத்தம், இதய துடிப்பு, சுவாச அளவீடு, உடலின் வெப்பநிலை, நாடித்துடிப்பு உள்ளிட்டவற்றை விரல்நுனியில் அறிந்துகொள்ள முடியும். விரைவில், ரத்த சர்க்கரை அளவை தெரிந்துகொள்ளும் சிறப்பம்சமும் இந்த மாட் சாதனத்துடன் இணைய உள்ளது.

லெனோவா எம்.ஐ.ஐ.எக்ஸ் 630:

குவால்கம் ஸ்நாப்ட்ராகன் 835 தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடியது இந்த லேப்டாப். 12.3 இன்ச் ஐ.பி.எஸ். டிஸ்பிளேவுடன் கூடிய இந்த லேப்டாப் குறைந்த எடையை கொண்டது. 20 மணிநேரம் நீடித்த பேட்டரி திறனை கொண்டது.

டெல் எக்ஸ்.பி.எஸ்.13:

டிசைன் மற்றும் செயல்திறனில் சிறந்ததாக உள்ள இந்த லேப்டாப் மிக குறைந்த எடையை கொண்டது. இந்த லேப்டாப் 8வது ஜெனரேஷன் இண்டெல் கோர் ஐ5 மற்றும் ஐ7 தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது. மேலும், 4 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம்ம் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை கொண்டது. 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

Ockel Sirius A

இது சிறிய டேப்லெட் வடிவத்தில் உள்ளது. விண்டோஸ் 10, குவாட்-கோர் இண்டெல் ஆட்டம் பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இ.எம்.எம்.சி. ஃபிளாஷ் மெமரி உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close