உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப கண்காட்சி CES 2019 எங்கே எப்போது துவங்குகிறது ?

என்னென்ன கேட்ஜெட்கள் அறிமுகமாகின்றன என்பதை ஜனவரி 6 மற்றும் 7 தேதிகளில் அறிந்து கொள்ளலாம்.

CES 2019 : ஒவ்வொரு கேட்ஜெட் ப்ரியர்களுக்கும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கும் மிக முக்கியமான இரண்டு ட்ரேட் ஷோக்கள் என்றால் ஒன்று CES மற்றொன்று வேர்ல்ட் மொபைல் காங்கிரஸ்.

லாஸ் வேகஸில் நடைபெற இருக்கும் CES கண்காட்சி 11ம் தேதி தான் ஆரம்பமாகிறது. ஆனால், பத்திரிக்கையாளர்களின் ரிவ்யூவிற்காக 6ம் தேதியில் இருந்து சிறப்பு வருகைகளுக்கும் காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளது அசோசியேசன்.

டிவி, லேப்டாப்கள், விடியோ ரெக்கார்டர்கள், ரோபோட்டிக்ஸ், ஆடியோ மற்றும் ஸ்மார்ட் கார்கள் என எலக்ட்ரானிக்ஸின் அனைத்து விதமான பொருட்களும் இங்கு காட்சி வைக்கப்படுவதோடு, தலை சிறந்த நிறுவனங்களான சாம்சங், சோனி, லெனோவோ, அமேசான், கூகுள், எல்.ஜி, மற்றும் குவால்கோம் போன்ற நிறுவனங்களின் புதிய கேட்ஜெட்கள் அறிமுக விழாக்களும் நடைபெறும்.

CES 2019 : எங்கே எப்போது நடைபெறுகிறது ?

நெவெதா, லாஸ்வேகஸில் ஜனவரி 8ம் தேதி துவங்கி 11ம் தேதி நிறைவடைகிறது. என்னென்ன கேட்ஜெட்கள் அறிமுகமாகின்றன என்பதை ஜனவரி 6 மற்றும் 7 தேதிகளில் அறிந்து கொள்ளலாம்.

CES 2019 : சாம்சங்

தென்கொரியாவின் மிகப் பெரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங் இம்முறை 4கே மற்றும் 8கே ரெசலியூசனில் இயங்க இருக்கும் டிவிகளை வெளியிட உள்ளது. க்ஃயூ. எல்.ஈ.டி வரிசையில் தி ஃப்ரேம் மற்றும் செரிஃப் டிவிகளை வெளியிட உள்ளது.

ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை வெளியிட திட்டமிட்டுள்ளது சாம்சங். கேலக்ஸி எஸ் 10 மற்றும் ஃபோல்டபிள் போன்கள் என இரண்டுமே பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ்ஸில் தான் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோனி

சோனி எக்ஸ்பீரியாவின் XA3 and L3 மாடல்கள் தான் இம்முறை இங்கு வெளியாக உள்ளது. Xperia XZ4 போன் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ்ஸில் வெளியாக உள்ளது.

எல்.ஜி

எல்.ஜி நிறுவனமும் 4கே மற்றும் 8கே டிவிகளை வெளியிட உள்ளது. ரோலபிள் டிவிகளை வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.  17 இன்ச் மற்றும் 2-இன்-1 என இரண்டு மாடல்களில் புதிய லேப்டாப்களை வெளியிட உள்ளது இந்த நிறுவனம்.

குவால்கோம்

5ஜி தொழில் நுட்பத்திற்காகவே தயாராகிவரும் ஸ்நாப்ட்ராகன் 855 ப்ரோசசர் இங்கு அறிமுகம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

×Close
×Close