Chandra Grahan Today Time: ஜூன் 5-ம் தேதி (இன்று) வானில் தோன்றும் அரிய சந்திர கிரகணம் பற்றி உலக மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இரவு 11.15 மணிக்கு துவங்கி அதிகப்பட்ச கிரகணத்தை ஜூன் 6 ஆம் தேதி அதிகாலை 12.54 மணிக்கு எட்டும். இந்த பெனும்பிரல் சந்திர கிரகணம் ஜூன் 6 ஆம் தேதி அதிகாலை 2.34 மணிக்கு முடிவடையும்.
ஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி?
சந்திர கிரகணங்கள் மூன்று வகையானவை - முழு சந்திர கிரகணம் (total lunar eclipse), பகுதி சந்திர கிரகணம் (partial lunar eclipse) மற்றும் பெனும்பிரல் சந்திர கிரகணம் (penumbral lunar eclipse). முழு நிலவின் போது, பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது அது சூரியனின் கதிர்கள் நேரடியாக சந்திரனை சென்றடைவதை தடுக்கிறது. இது நமது இயற்கை செயற்கைக்கோளில் ஒரு நிழலைக் காட்டுகிறது அது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
ஏற்கனவே 2020 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தை நாம் ஜனவரி மாதத்தில் கண்டிருக்கிறோம். இது போன்ற மேலும் மூன்று நிகழ்வுகள் இந்த ஆண்டில் நிகழப்போகிறது அடுத்த நிகழ்வும் இந்த ஜூன் மாதத்திலேயே நடக்க இருக்கிறது. இந்த கிரகணம் பெனும்பிரல் ஒன்றாக இருக்கும் இதை ஒரு சாதாரண முழு நிலவில் இருந்து வேறுபடுத்துவது கடினம்.
Lunar Eclipse 2020 In India: பெனும்பிரல் சந்திர கிரகணம் என்றால் என்ன ?
சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை சரியான நேர்கோட்டில் அமையாமல் (imperfectly aligned) இருக்கும் போது பெனும்பிரல் சந்திர கிரகணம் நிகழும். பூமி தனது வெளிப்புற நிழலின் மூலம் சூரியனின் ஒளி நேரடியாக சந்திரனை சென்றடைவதை தடுக்கும், இது பெனும்பிர என அழைக்கப்படுகிறது. பூமியின் நிழலின் இருண்ட மையத்தை விட பெனும்பிர மிகவும் மங்கலானது என்பதால், பெனும்பிர கிரகணத்தை சாதாரண முழு நிலவிலிருந்து வேறுபடுத்துவது கடினம். பூமியின் நிழலின் மங்கலான, வெளிப்புறப் பகுதி வழியாக சந்திரன் நகரும்போது, பூமியிலிருந்து ஒரு பெனும்பிரல் சந்திர கிரகணத்தைக் காண்கிறோம்.
வரவிருக்கும் சந்திர கிரகணத்தை எங்கிருந்து பார்ப்பது
ஆசிய, ஆஸ்திரேலியா, ஐரோப்பா அல்லது ஆப்ரிக்கா ஆகிய இடங்களில் இருந்தால் நீங்கள் இந்த பெனும்பிரல் சந்திர கிரகணத்தைப் பார்க்கலாம், என timeanddate.com தெரிவிக்கிறது.
பெனும்பிரல் சந்திர கிரகணம் நேரம்
Indian Standard Timing (IST)ன் படி, இந்த சந்திர கிரகணம் ஜூன் 5 மற்றும் ஜூன் 6, 2020 ஆம் தேதிகளில் ஏற்படும். இது ஜூன் 5 ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு துவங்கி அதிகப்பட்ச கிரகணத்தை ஜூன் 6 ஆம் தேதி அதிகாலை 12.54 மணிக்கு எட்டும். இந்த பெனும்பிரல் சந்திர கிரகணம் ஜூன் 6 ஆம் தேதி அதிகாலை 2.34 மணிக்கு முடிவடையும்.
2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்படுகின்ற இந்த சந்திர கிரகணத்தை தவிர மேலும் இரண்டு கிரகணங்கள் வரப்போகின்றன. ஒரு சந்திர கிரகணம் ஜூலை மாதமும் இந்த வருடத்தின் இறுதி சந்திர கிரகணம் நவம்பர் மாதமும் நிக்ழப்போகிறது. இந்த இரண்டு கிரகணங்களும் பெனும்பிரல் தான். அரிய இந்த நிகழ்வை நீங்கள் கொண்டாடுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.