chandrayaan 2 landing : இந்தியாவின் ஜியோசின்க்ரோனஸ் சேட்டிலைட் ஏவுதல் வாகனம், GSLV MkIII-M1 ராக்கெட் 3,840 கிலோ எடையுள்ள சந்திரயான் -2 விண்கலத்தை ஜூலை 22 ஆம் தேதி பூமியின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக ஏவியது.
Advertisment
இந்தியாவின் இரண்டாவது சந்திர பயணம், சந்திரனின் முற்றிலும் ஆராயப்படாத ஒரு பகுதியான் தென் துருவப் பகுதியை ஆராயவுள்ளது.
இந்த தரையிறக்கம் வெற்றிகரமாக நிறைவடைந்ததும், சந்திரனில் மென்மையான தரையிறக்கத்தை மேற்கொண்ட ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா நான்காவது நாடாக மாற்றும்.
சந்திராயன்-2 திட்டத்தில் நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வரும் ஆர்பிட்டர், நிலவில் தரையிறங்க உள்ள லேண்டர் விக்ரம், நிலவின் பரப்பில் ஆய்வுசெய்ய உள்ள ஆய்வூர்தியான பிரக்யான் ((Pragyan)) ஆகியவை இடம்பெறுகின்றன.
Advertisment
Advertisement
சந்திராயன்-2 திட்டத்தில் மொத்தம் 14 ஆய்வுக் கருவிகள் இடம்பெறுகின்றன. இதில் நாசாவின் லேசர் ரெட்ரோரெஃப்ளக்டர் அரே Laser Retroreflector Array கருவியும் இடம்பெறுகிறது.
இதுதவிர 13 கருவிகளில் 8 கருவிகள் ஆர்பிட்டரிலும், லேண்டரில் 3 கருவிகளும் ஆய்வூர்தியில் 2 கருவிகள் இடம்பெறுகின்றன.
மொத்தமாக 3.8 டன் எடையுடன் கூடிய சந்திராயன்-2 விண்கலம் மூலம், முதன் முதலில் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் திட்டம் என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைக்க உள்ளது. மேலும் நிலவில் நீர் இருக்கும் இடம் மற்றும் நீரின் அளவு தொடர்பான தகவல்களை திரட்டுவதற்கான ஆய்வுகளும் நடைபெற உள்ளன.
இந்தியாவே பெருமைக் கொள்ள போகும் இந்த சிறப்பு தருணத்தில் நிலவில் நாளை என்னென்ன நிகழலாம் என்பதை பார்ப்போம்.
1970 களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் கூற்றுகளை எடுத்துக் கொண்டால் நிலவில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக பேசப்பட்டது. ஆனால் அதனை நிரூபிப்பதற்கான சான்றுகள் மிகவும் குறைவு. அதன் பின்பு நிலவில் நாசா நடத்திய ஆராய்ச்சியில் நிலவில் இருப்பது வெறும் பாறை மற்றும் மண் மாதிரிகள் என கூறப்பட்டது.
1990 ஆம் ஆண்டு நாசா மூலம் பயணம் மேற்கொண்ட கிளெமெண்டைன் மற்றும் சந்திர ப்ராஸ்பெக்டர் செயற்கைகோள்கள் சந்திரனில் நீர் இருப்பதற்கான சிக்னலை முறையாக ரெக்டார்ட் செய்தனர். 1998 ஆம் ஆண்டில் காசினிசெயற்கை கோளும் சனியை நோக்கி செல்லும் வழியில் நிலவில் சில ஆராய்சிகளை செய்தது.
அதன் பின்பு 2008 ஆம் ஆண்டு சந்திராயன் 1 -ல் இரண்டு கருவிகள் பொருத்தப்பட்டு நிலவிற்கு அனுப்பட்டன.அதில் நீர் இருப்பதற்கான சான்றுகள் சரிவர தெரியவில்லை. அதை தவிர அந்த ஆராய்சியில் விஞ்ஞானிகளின் ஆய்வு வேறு பல இலக்குகளை நோக்கி இருந்தது.
ஆனால் இம்முறை நிலாவின் கனிம வளம், நீர் இருப்பு பற்றி சந்திரயான்-2 ஆராய இருக்கிறது. வருங்காலத்திற்கு நீரின் தேவை இன்றியமையாதாகவுள்ளது. நிலவில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிரூப்பிக்கப்பட்டால் அங்கு மனிதர்கள் வசிக்க முடியுமா? என்பதை நோக்கி அடுத்த ஆராய்ச்சி திரும்பும்.
அதே நேரம் நிலவில் இருக்கும் நீரை பூமிக்கு கொண்டு வருவது பொருளாதார ரீதியாக சாத்தியமில்லை.
ஆழமான பள்ளங்களில் பனியாக சிக்கி நிலவின் துருவப் பகுதிகளில் நிறைய நீர் இருப்பதாக நம்பப்படுகிறது. சில மதிப்பீடுகள் துருவ பிராந்தியத்தில் பனியின் அளவு மில்லியன் முதல் பில்லியன் டன் வரை இருக்கும்.சந்திரயான் -2 நீர், குறிப்பாக துருவப் பகுதியில் இருப்பதற்கான புதிய ஆதாரங்களை வழங்கும். இது சந்திரனில் ஏராளமான நீர் மூலக்கூறுகளை மதிப்பிடும்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news