Chandrayaan 2 completes second lunar orbit manoeuvre : நிலவின் சுற்றுப்பாதையை நேற்று அடைந்த சந்திரயான் 2 இன்று மதியம் 12 மணி அளவில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இரண்டாவது முறையாக தன்னுடைய சுற்றுவட்டப்பாதையை மாற்றி அமைத்துள்ளது. மாற்றி அமைக்கப்பட்ட இந்த பாதையில் நிலவின் தரைக்கு நெருங்கி 118 கி.மீ தொலைவிலும், அதிகபட்ச தொலைவாக 4,412 கி.மீ தொலைவிலும் நிலவை சந்திரயான் சுற்றிவரும். இன்று மதியம் 12:50 மணியில் இருந்து இந்த சுற்றுவட்டப்பாதையில் இயங்கி வருகிறது சந்திரயான் 2. இதற்காக சந்திரயான் எடுத்துக் கொண்ட நேரம் 1228 நொடிகளாகும்.
இதே போன்று இன்னும் மூன்று முறை தன்னுடைய சுற்றுவட்டப்பாதையை சந்திரயான் 2 மாற்றி அமைக்கும். அடுத்த முறை இந்நிகழ்வு 28ம் தேதி காலை 05:30 மணியில் இருந்து 06:30 மணி வரையில் நடைபெறும். இந்த நிலையை சந்திரயான் எட்டியவுடன் விக்ரம் லேண்டர், ரோவர் பிரக்யானுடன் விண்கலத்தில் இருந்து வெளியேற ஆயத்தம் ஆகும். செப்டம்பர் 4ம் தேதி விண்கலத்தில் இருந்து விலகி நிலவை நோக்கி சீரான வேகத்தில் பயணிக்க துவங்கும் சந்திரயான் 2.