சந்திரயான் -2: இடம் பெற்ற கருவிகள், அவற்றின் பணிகள் முழு விவரம்

Chandrayaan 2 Instruments: ஆர்பிட்டரில் எட்டு, விக்ரம் லேண்டரில் நான்கு மற்றும் பிரக்யான் ரோவரில் இரண்டு என்று சந்திரயன் -2 இல் 14 சாதனங்கள் உள்ளன. 

By: Updated: September 6, 2019, 06:16:06 PM

Chandrayaan 2 Landing: சந்திரயான் -2 நிலவில் நீர் இருப்தற்கான ஆதாரங்களையும், நீரின் அளவு மதிப்பிடுவதற்கான முயற்சியை மேற்கொள்ளப் போகிறது என்பது நம் அனைவராலும் அறியப்பட்ட ஒன்றே. ஆனால், சந்திரயன் -2 ல் இருக்கும் மற்ற மற்ற பயன்பாட்டு சாதனங்கள்  என்ன ஆய்வுகளை மேற்கொள்ளப்போகிறது என்பதை இங்கே காண்போம்.

மேப்பிங்: சந்திரயான் -2 அதைப் பார்க்கக்கூடிய பகுதிகளின் விரிவான மேப்பிங் செய்ய முயற்சிக்கும். ஆர்பிட்டரில் இரண்டு கேமராக்கள் உள்ளன.

நிலப்பரப்பு மேப்பிங் கேமரா( Terrain Mapping Camera )
ஆர்பிட்டர் உயர் தீர்மானம் கேமரா (Orbiter High resolution Camera )

நிலவின் மேற்பரப்பை  3-டி படங்களாய் தயாரிக்க நிலப்பரப்பு மேப்பிங் கேமரா( Terrain Mapping Camera ) பொருத்தப்பட்டுள்ளது. அறிவியல் ஆராய்ச்சிக்கு வேண்டிய படங்களை  தயாரிக்க ஆர்பிட்டர் உயர் தீர்மானம் கேமரா (Orbiter High resolution Camera ) பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார்( Dual Frequency synthetic Aperture Radar ) நிலவின் துருவப் பகுதிகள் உட்பட்ட  அனைத்து பகுதிகளையும்  உயர்-தெளிவு வரைபடங்களை உருவாக்கும் திறன் கொண்டது.

கனிமவியல் மற்றும் அடிப்படை பகுப்பாய்வு: சந்திரயான் -2 வில் பல பயன்பாட்டு சாதனங்கள் நிலவில் இருக்கும் தனிமங்கள் மற்றும் தாதுக்களின் வகைகளை மதிப்பீடு செய்வததற்காக டேட்டாக்களை  சேகரிக்கும்

சூரியஎக்ஸ் ரே ஸ்பெக்ட்ரம் (Solar X ray Spectrum): சூரியனில் இருந்து வெளிப்படும் எக்ஸ்-கதிர்களைப் படிப்பதற்காக இக்கருவிகள் பயன்படுகிறது .

தண்ணீர் மற்றும் அதன்  மதிப்பீடு செய்தல் : சந்திரயான் -2 வில் இருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கருவிகள் இந்த தண்ணீர் பற்றியத் தேடலுக்காக தான்  உள்ளது .

நிலவின்  வளிமண்டலத்தை  ஆய்வு செய்தல்: விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு கருவிகள் சந்திரனின் வளிமண்டலத்தின் பல்வேறு உயரங்களில் உள்ள வெப்பநிலையை  அளவிடும்.

மேலும், நிலவின் நில அதிர்வு பற்றிய ஆய்வுகளும் சந்திராயன்-2 மேற்கொள்ளப்படும்.

ஆர்பிட்டரில் எட்டு, விக்ரம் லேண்டரில் நான்கு மற்றும் பிரக்யான் ரோவரில் இரண்டு என்று ஒட்டுமொத்தமாக சந்திரயன் -2 இல் 14 சாதனங்கள் உள்ளன. 2008 – ல் அனுப்பப்பட்ட சந்திரயான் -ஒன்றில் 13 கருவிகள் இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Chandrayaan devices and instruments other functional mission of chandrayaan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X