/tamil-ie/media/media_files/uploads/2019/08/EClCo04VAAElWdI.png)
சந்திரயான் 2 வெளியிட்ட நிலவின் புகைப்படங்கள்
Chandrayaan 2 enters third lunar orbit manoeuvre : நிலவில் தரையிறங்க தயாராகும் சந்திரயான் 2 தற்போது மூன்றாம் படிநிலையை எட்டியதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது சந்திரான் நிலவுக்கு மிக அருகில் 179 கி.மீ (நெருங்கிய புள்ளி), 1412 கி.மீ (அதிகபட்ச தொலைவு) என்ற தொலைவில் நிலவை சுற்றி வருகிறது.
இந்த மூன்றாம் படிநிலையை அடைய இன்று காலை 09:02 மணிக்கு தன்னுடைய முயற்சியை துவங்கியது சந்திரயான். 20 நிமிடங்களில் மூன்றாவது படிநிலையை (புதிய சுற்றுப்பாதையை) அடைந்தது சந்திரயான் 2.
Third Lunar bound orbit maneuver for Chandrayaan-2 spacecraft was performed successfully today (August 28, 2019) at 0904 hrs IST.
For details please visit https://t.co/EZPlOSLap8pic.twitter.com/x1DYGPPszw
— ISRO (@isro) August 28, 2019
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்திருக்கும் சதீஷ் தவான் மைதானத்தில் ஜூலை 22ம் தேதி இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. அடுத்த சுற்றுவட்டப்பாதையை வருகின்ற 30ம் தேதி அடைகிறது சந்திரயான் 2. இந்த நிகழ்வு அன்று மாலை 6 மணி முதல் ஏழு மணி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.