Chandrayaan-2 landing : ஜூன் 22ம் தேதி துவங்கி இன்றுடன் 48 நாட்கள் விண்வெளியில் பயணித்து வருகிறது சந்திரயான் 2. புவியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து, விண்கலத்தில் இருந்து லேண்டர் வெளியான வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் திட்டமிட்ட பாதையில் தொடர்ந்து பயணிக்கிறது. தற்போது வரை மட்டும் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பயணம் செய்துள்ளது சந்திரயான் 2. ஆனால் இன்று நிலவின் தரையிறங்கும் தருணம் தான் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏன் என்றால் தற்போது லேண்டர் விக்ரம் நொடிக்கு 6 கி.மீ வேகத்தில் பயணித்து வருகிறது. அதாவது மணிக்கு 21,600 கி.மீ ஆகும்.
சந்திரனை நோக்கி செலுத்தப்பட்ட 109 செயற்கை கோள்கள்
சராசரியாக பயணிக்கும் ஏர்லைன்களை விட 30 மடங்கு வேகத்தில் லேண்டர் பயணித்து வருகிறது. ஆனால் நிலவில் அது தரையிறங்கும் போது அதன் வேகத்தை நொடிக்கு வெறும் 2 மீட்டர் என்ற வேகத்தில் குறைக்க வேண்டும். அதுவும் வெறும் 15 நிமிடங்களில். இது சாத்தியப்பட்டால் மட்டுமே இன்று நிலவில் (அதாவது நாளை காலை 01:30 மணிக்கு) தரையிறங்கும் சந்திரயான் 2. நிலவில் கால் பதிக்கும் நான்காவது நாடு என்ற பெருமையை தக்க வைத்துக் கொள்கிறது இந்தியா. அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே இதற்கு முன்பு நிலவில் செயற்கைகோள்களை தரையிறக்கியும் மனிதர்களை தரையிறக்கியும் உள்ளது. இந்த கடைசி 15 நிமிடங்களுக்கான செயல்பாடுகளை புரிந்து கொண்டால், இதில் இருக்கும் சிக்கல்கள் என்னவென்று நம்மால் அறிந்து கொள்ள இயலும்.
To read this article in English
5 மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் அனுப்பிய செயற்கைகோள் இறுதி நிமிடங்கள் வரை சிறப்பாக செயல்பட்டது. ஆனாலும் சாஃப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்க தேவையான வேக கட்டுபாட்டினை அதனால் எட்ட இயலவில்லை. எனவே இந்த செயற்கைகோள் விண்ணில் வெடித்து சிதறியது. இதுவரையில் நிலவிற்கு 109 செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் அதில் 41 செயற்கை கோள்களின் முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்துள்ளது. 1990க்கு பின்பு இந்த 20 வருடங்களில் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட செயற்கை கோள்களில் ஒன்றே ஒன்று தான் இப்படியான தோல்வியை தழுவியிருக்கிறது. அதுவும் இஸ்ரேல் நாட்டினுடையது. வெற்றி பெற்ற மிசன்களில் மூன்று மட்டுமே சாஃப்ட் லேண்டிங் ம்மூலம் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளது. மற்றவை அனைத்தும் ஆர்பிட்டர் மற்றும் ஃப்ளைபை வகையை சேர்ந்தவையாகும்.
<
Chandrayaan-2 landing - க்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பம்
விண்வெளியில் இயங்கும் இந்த லேண்டரின் வேகத்தை கட்டுப்படுத்தும் போது த்ரஸ்டர்கள் வேலை செய்யத் துவங்கும். ராக்கெட் ஏவப்படும் போது உந்து விசை காரணமாக, ராக்கெட் எதிர்திசையில் மேல்நோக்கி பாய்வதைப் போன்றே இதன் செயல்பாடும் இருக்கும். ஆனால் ராக்கெட் பயணிக்கும் திசைக்கு நேரான திசையில் இந்த த்ரஸ்ட்ர்கள் இயங்கத் துவங்கினால் வேகம் மட்டுப்படுத்தப்படும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே விக்ரம் நிலவில் சாஃப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்க உள்ளது.
லேண்டரில் இரண்டு வகையான ரசாயனங்கள் எரிபொருட்களாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மோனோ மெத்தைல் ஹைட்ரஜைன் மற்றும் நைட்ரஜன் டெட்ராக்ஸைடு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவரை இரண்டும் ஒன்று கலக்கப்பட்டு வாயு நிலையில் த்ரஸ்டிங் சேம்பரில் சேமிக்கப்பட்டுள்ளது. விக்ரம் லேண்டரில் நான்கு த்ரஸ்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. நிலவில் எந்த பாதிப்பும் இன்றி சந்திரயான் தரையிறங்க இந்த நான்கு த்ரஸ்டர்களும் ஒரே மாதிரியான சமமான இயக்கத்தையும், எரிசக்தியையும் வெளியேற்றா வேண்டும். இதில் எவையேனும் ஒன்று சரியாக வேலை செய்யவில்லை அல்லது ப்ரோகிராம் செய்யப்பட்ட நேரத்தில் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால் 5வதாக பொருத்தப்பட்டிருக்கும் கூடுதல் த்ரஸ்டெர் வேலை செய்ய துவங்கும். மேலும் சில பாதுகாப்பு அம்சங்களும் இந்த லேண்டரில் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : சந்திரயான் 2 : புதிய சரித்திரம் படைக்க இருக்கும் 48 நாள் பயணம்!
விக்ரமில் அதிர்ச்சிகளையும் உராய்வுகளையும் தாங்கும் வண்ணம் நான்கு கால்கள் பொருத்தப்பட்டுள்ளது. லேணடரின் வேகம், நொடிக்கு 2 மீட்டர் என்ற வேகத்தில் குறைக்கப்பட்ட பின்னர் தான் இது இயங்கத் துவங்கும். நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100 மீட்டருக்கு மேலே விக்ரம் வளம் வரும் போது, எங்கே தரையிறங்கப்பட வேண்டும் என்பது தீர்மானம் செய்யப்படும். இரண்டு நிலவு குழிகளுக்கு மத்தியில் ஒரு இடத்தில் லேண்டர் தரையிறங்க வேண்டும். மிக அருகில் சென்ற பின்பு தரையிறங்குவதற்கு ஏதேனும் தடைகள் உள்ளதா என்பதை தீர்மானம் செய்துவிட்டு மெதுவாக நிலவில் தரையிறங்கும்.
நிலவில் தரையிறங்கிய 3 மணி நேரம் கழித்தே 6 சக்கரங்கள் பொருத்தப்பட்ட ரோபோவான ரோவர் ப்ரக்யான் லேண்டரில் இருந்து வெளியேறும். அது நிலவின் மேற்பரப்பினை ஆராய்ந்து தகவல்களை சேமிக்க உள்ளது. அது நொடிக்கு 1 செ.மீ என்ற வேகத்தில் தான் நகரத்துவங்கும். ரோவரால் நேரடியாக லேண்டருன் தொடர்பு கொள்ள இயலும். லேண்டரும் ரோவரும் வெறும் 14 நாட்கள் மட்டுமே விண்ணில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆர்பிட்டர் ஒரு ஆண்டுக்கு விண்வெளியில், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் 100 கி.மீ அப்பால் இருந்து நிலவை ஆராய்ந்து தகவல்களை இஸ்ரோவிற்கு அனுப்பும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.