Chandrayaan 2 Latest Updates : சந்திரயான் 2, 22ம் தேதி மதியம் 2 மணி 43 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்பட்டது. நேற்று தன்னுடைய சுற்றுவட்டப்பாதையை குறைந்தது 233 கி.மீ அதிகபட்சம் 45,163 கி.மீ என்ற கணக்கில் மாற்றிக் கொண்டது. 3 மணிக்கு சரியாக 48 நொடிகள் இருக்கின்ற நிலையில் அது தன்னுடைய முந்தைய சுற்று வட்டப்பாதையில் விலகி இந்த பாதையை நோக்கி பயணிக்க துவங்கியது.
Chandrayaan 2 moves higher orbit today
15ம் தேதி திட்டம் கைவிடப்பட்டதால், நிலவை அடைவதற்கு குறைந்த நாட்களும், புதிய வழிகளும் இஸ்ரோவால் முன்மொழியப்பட்டு தற்போது அந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. அதன்படி புவியின் சுற்று வட்டப்பாதையில் 17 நாட்களுக்குப் பதிலாக 25 நாட்கள் பயணம் என்று முடிவானது. நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு செல்ல 7 நாட்கள், என்று கணிக்கப்பட்டு செப்டம்பர் 7ம் தேதி விக்ரமும் ப்ரக்யானும் நிலவில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
Chandrayaan 2 new manoeuvre
இந்நிலையில் இன்று புதிய சுற்றுவட்டப்பாதையை அடைந்தது சந்திரயான் 2. இதே போன்று நாளை ஒரு சுற்றுவட்டப்பாதையையும், ஜூலை 29, ஆகஸ்ட் 2 மற்றும் ஆகஸ்ட் 6 தேதிகளில் புவிக்கும் செயற்கை கோளுக்குமான தூரம் அதிகரிக்கப்பட்டு புதிய புதிய சுற்றுவட்டபாதைகளில் இயங்கத் துவங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஆன்போர்ட் ப்ரோபல்ஷன் சிஸ்டம் மூலமாக இந்த புதிய பாதையில் பயணிக்க துவங்கியுள்ளது சந்திரயான் 2. அடுத்த 12 நாட்களில் இந்த சுற்றுவட்டப்பாதையின் நீளம் அதிகரிக்கும். 233 கி.மீ என்பது புவிக்கு மிகவும் நெருங்கிய வட்டம். 1,43,953 கி.மீக்கு அப்பால் சென்ற பிறகு தான் இந்த செயற்கை கோள் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் பயணிக்கும். ஆகஸ்ட் 20ம் தேதி நிலவின் நீள்வட்டப்பாதைக்குள் அடியெடுத்து வைக்கும் சந்திரயானின் ஆர்பிட்டர் 100 கி.மீ தொலைவில் நிலவை சுற்றிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : சந்திரயான் 2 : புதிய சரித்திரம் படைக்க இருக்கும் 48 நாள் பயணம்!