இஸ்ரோ, நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக சந்திரயான் 2-ஐ அனுப்பியது. சந்திரயான் 2 என்பது ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என்ற மூன்று அம்சங்களைக் கொண்டதாகும்.
ஆர்பிட்டர் என்பது நிலவின் சுற்றுப்பாதையில் வட்டமிடும் கருவியாகும். இஸ்ரோவின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு படி அடுத்த ஏழு வருடங்களுக்கு நிலவை சுற்றி ஆய்வுகளை இந்த ஆர்ப்பிடர் செய்யும். ஆர்பிட்டரில் இரண்டு கேமராக்கள் உள்ளன.
நிலப்பரப்பு மேப்பிங் கேமரா( Terrain Mapping Camera )
ஆர்பிட்டர் உயர் தீர்மானம் கேமரா (Orbiter High resolution Camera )
நிலவின் மேற்பரப்பை 3-டி படங்களாய் தயாரிக்க நிலப்பரப்பு மேப்பிங் கேமரா( Terrain Mapping Camera ) பொருத்தப்பட்டுள்ளது. அறிவியல் ஆராய்ச்சிக்கு வேண்டிய படங்களை தயாரிக்க ஆர்பிட்டர் உயர் தீர்மானம் கேமரா (Orbiter High resolution Camera ) பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர், சில முக்கிய புகைப்படங்களை எடுத்து இஸ்ரோ மையத்திற்கு அனுப்பியுள்ளது. இதை இஸ்ரோவும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சந்திரனின் தெற்கு துருவ பகுதியில் அமைந்துள்ள போகுஸ்லாவ்ஸ்கி இ பள்ளத்தாகின் புகைப்படங்களைத் தான் நாம் இங்கு காண்கின்றோம்
சந்திரயான் 2 திட்டத்தில் மிக முக்கியமாக கருதப்படுவது நிலவில் தரையிரங்கும் விக்ரம் லேண்டர் ஆகும். லேண்டர் செப்டம்பர் 7 அதிகாலை நிலவில் தரையிறங்கிய போது சிக்னல்கள் முற்றிலுமாக தடைபெற்று ஹர்ட் லேண்டிங்( மிகவும் வேகமாக ) மூலம் தரையிரங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.