Chandrayaan 2 photographed earth with L14 Camera : ஜூலை மாதம் 22ம் தேதி நண்பகல் 2 மணி 43 நிமிடங்களுக்கு விண்ணில் சீறியப்பாயத் துவங்கியது இஸ்ரோவின் பாகுபலி. 100 கோடி மக்களின் கனவுகளையும் சந்திரயான் 2க்குள் வைத்து இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. விண்வெளிக்கு ஏவப்பட்டு 13 நாட்கள் ஆன நிலையில் நேற்று சந்திரயான் 2-ல் பொருத்தப்பட்டுள்ள கேமரா எல் 14 (L14) புவியை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
Chandrayaan 2 photographed earth with L14 camera
இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு அந்த புகைப்படங்களை பதிவிட்டு, எடுக்கப்பட்ட நேரத்தையும் குறிப்பிட்டுள்ளது. செப்டம்பர் 7ம் தேதி விக்ரமும் ப்ரக்யானும் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திட்டமிட்டபடி தரையிறங்கினால் நிலவின் தென் துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா தக்க வைக்கும்.
மேலும் படிக்க : சந்திரயானின் 48 நாட்கள் சாகச பயணம்
சந்திரயான் எடுத்த புகைப்படங்கள்
நேற்று மாலை 5 மணி 28 நிமிடங்களுக்கு சந்திரயான் எடுத்த புகைப்படம்
நேற்று மாலை 5 மணி 29 நிமிடங்களுக்கு சந்திரயான் எடுத்த புகைப்படம்
நேற்று மாலை 5 மணி 32 நிமிடங்களுக்கு சந்திரயான் எடுத்த புகைப்படம்
நேற்று மாலை 5 மணி 34 நிமிடங்களுக்கு சந்திரயான் எடுத்த புகைப்படம்
நேற்று மாலை 5 மணி 37 நிமிடங்களுக்கு சந்திரயான் எடுத்த புகைப்படம்