chandrayaan 2 videos: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூன் 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்றுவட்டப்பாதையில் வந்து கொண்டிருந்த விண்கலம் ஜூலை 23-ம் முதல் ஆகஸ்டு 6-ம் தேதி வரை 5 முறை படிப்படியாக நிலை உயர்த்தப்பட்டது.
ஆகஸ்ட் 6ம் தேதி, இஸ்ரோ வெளியிட்ட செய்திகுறிப்பின்படி, புவிக்கும் சந்திரயானுக்கும் இடையே குறைந்தபட்ச தூரம் 276 கி.மீ என்றும், அதிகபட்ச தூரம் 1,42,975 கி.மீ தூரம் என்ற வகையில் இருந்தது. பின்னர் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக புவியீர்ப்பு விசையை விட்டு வெளியே சென்று, நிலவை நோக்கி பயணித்தது.
சந்திரயான்- 2 விண்கலம் செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை நிலவில் தரையிறங்க உள்ளது. விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக தரையறக்கப்பட்ட பின்னர், காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள்ளாக, விக்ரம் லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவர் வெளியேற்றப்படும்.ரோவர், நொடிக்கு ஒரு செ.மீ., என்ற வேகத்தில், நிலவில் ஊர்ந்து சென்று ஆய்வில் ஈடுபடும்.
அதில் உள்ள சக்தி வாய்ந்த மற்றும் அதி நவீன தொழில்நுட்ப வசதியுடைய கருவிகள் மூலம், நிலவை தொடர்ந்து புகைப்படம் எடுத்து, இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கும். இந்த ஆய்வில் சந்திராயன் 2 நமக்கு கூற இருக்கும் தகவல்கள் பற்றி ஒரு சுருக்கமான பார்வை.
இதற்கு முன்பு 2008 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 1 போர்டில் இரண்டு கருவிகள் பொருத்தப்பட்டன. நிலவில் நீர் குறித்த ஆராய்ச்சிக்கு. இருப்பினும் அந்த கருவிகளால் நீர் இருப்பதை உறுதி செய்ய முடிந்ததை தவிர நீரின் அளவு மற்றும் மதிப்பீடு குறித்து அளவிட முடியவில்லை. தண்ணீர் திரவ, பிரித்தெடுக்கக்கூடிய, வடிவத்தில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. கண்டறியப்பட்டவை ஹைட்ரஜன், எச் 2 ஓ மற்றும் ஹைட்ராக்சில் அயனிகளின் மூலக்கூறுகள் மட்டுமே.
நிலவில் நீர் கண்டறியப்படுவதற்கான குறித்த பல விவரங்கள் சந்திராயன் 1 ல் வெளியிடப்பட்டன. இம்முறை சந்திராயன் 2 நிலவின் மேற்பரப்பு வெவ்வேறு கூறுகளின் ஆக்சைடுகளால் நிறைந்துள்ளது என்பதை தொடங்கி ஆக்சைடுகள் சூரியக் காற்றில் உள்ள ஹைட்ரஜன் அயனியுடன் வினைபுரிந்து ஹைட்ராக்ஸில் மூலக்கூறுகளை உருவாக்கக்கூடும், அவை மீண்டும் ஹைட்ரஜனுடன் இணைந்து எச் 2 0 ஐ உருவாக்கக்கூடும் வரை தெளிவாக விவரிக்க உள்ளன.