Advertisment

சந்திராயன் 3 மாணவர்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது: வீரமுத்துவேல்

படிப்பு முக்கியம். எந்த பள்ளியில் இருந்து படிக்கிறோம் என்பது முக்கியமல்ல, மாணவர்கள் நிறைய ஆராய்ச்சி திட்டங்களை வகுக்க வேண்டும், ஏனென்றால் நானே அரசு பள்ளியில் இருந்து வந்தவன்தான் என்று வீரமுத்துவேல் கூறினார்.

author-image
WebDesk
New Update
Veeramuthuvel.jpg

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள சுகுணா கல்வி குழும மாணவர்களுடன் சந்திராயன் -  3 குறித்து அதன்  திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் இன்று (அக்.28) விளக்கமளித்து கலந்துரையாடினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் கூறியதாவது, "சந்திரயான் 3 மிஷன் முடிந்து விட்டது. சந்திராயன் லேண்ட் ஆன பின்பு வந்த புழுதி ஒரு அச்சுறுத்தலாக இல்லை. இதுவரை யாரும் போகாத இடத்தில் சந்திராயன் இறக்கப்பட்டது. 

Advertisment

நிலவிற்கு மனிதர்களை அனுப்புவது என்பது நீண்டகால திட்டம். அதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. நிலவிற்கு மனிதர்கள் போவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.  

ஊதியம் இல்லை - தவறான தகவல் 

சந்திராயான் 3 தரையிறக்கம் என்பது மிகவும் மகிழ்வான ஒன்று. பிரதமர் நேரடியாக கலந்துரையாடிது மகிழ்ச்சி அளிக்கின்றது. இஸ்ரோவில் பல திட்டங்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கின்றது. படிப்பது மட்டுமே முக்கியம். கல்லூரியில் இருந்து வெளியே வரும் போது நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். சந்திராயன் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்பது தவறான தகவல். விண்வெளி ஆராய்ச்சியில் பிறநாடுகளுக்கு இணையாக நம்முடைய செயல்பாடு இருக்கின்றது. சந்திராயன் தென்துருவத்தின் அருகில்தான் இறக்கப்பட்டுள்ளது.  

தென்துருவத்தில் இறக்கப்பட வில்லை. இதில் மறைக்க எதுவுமில்லை, மாணவர்கள் மத்தியில் விண்வெளி குறித்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் தனக்கும் இஸ்ரோவில் பணியாற்றுபவர்களுக்கும் நிறைய கடிதம் எழுதி இருக்கின்றனர். மாணவர்கள் சந்திராயன் குறித்து ஆர்வமாக துல்லியமாக கடிதம் எழுதி இருப்பது என்பது சந்தோஷமாக இருக்கின்றது.

எந்த பள்ளியில் இருந்து படிக்கிறோம் என்பது முக்கியமல்ல, மாணவர்கள் நிறைய ஆராய்ச்சி திட்டங்களை வகுக்க வேண்டும், ஏனென்றால் நானே அரசு பள்ளியில் இருந்து வந்தவன்தான்" என விஞ்ஞானி வீரமுத்துவேல் தெரிவித்தார்.

செய்தி: பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment