நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி பாயிண்ட் எனப் பிரதமர் நரேந்திர மோடி பெயரிட்டார். இந்நிலையில், நிலவின் தென் துருவத்தில் சிவசக்தி புள்ளியில் அது தரையிறங்கி இடத்தில் ரோவர் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பை செய்தாக கூறப்பட்டுள்ளது.
சிவசக்தி புள்ளியில் இருந்து ரோவர் 39 மீட்டர் மேற்கு நோக்கி பயணித்தபோது, பாறைகள் மற்றும் அதன் துண்டுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கண்டறிந்துள்ளது. தெற்குப் பகுதியில் ஒரு சிறிய பள்ளத்தின் சுவர் சரிவுகள், தரை மற்றும் விளிம்பில் சிதறிய சிறிய பாறைத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 23, 2023 அன்று விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கி ரோவரை வெளியேற்றியது. பிரக்யான் ரோவரின் டேட்டா ஆய்வு படி, இந்த கண்டுபிடிப்புகள் சந்திர மேற்பரப்பில் பாறை துண்டுகளின் தோற்றம் மற்றும் அதன் பரவல் பற்றிய மர்மத்தை தீர்க்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
பிரக்யான் ரோவர் சந்திரனின் மேற்பரப்பில் ஒரே சந்திர நாளில் 103 மீட்டர் தூரம் பயணித்தது, அதே நேரத்தில் அதன் எடை சுமார் 27 கிலோகிராம் ஆகும். அதில் பல உபகரணங்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோள்கள், புறக்கோள்கள் மற்றும் வாழ்விடம் குறித்த சர்வதேச மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பகுப்பாய்வு செய்யப்பட்ட தரவு, இந்த பாறைகள் மற்றும் துண்டுகள் சுமார் 10 மீட்டர் விட்டம் கொண்ட அந்த பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பள்ளம் மூலம் பெறப்பட்டதாக சுட்டிக்காட்டுகிறது.
விண்வெளி வானிலையின் வெளிப்பாடு காரணமாக, இரண்டு பாறைத் துண்டுகள் degradation ஆனதற்கான தெளிவான அறிகுறிகளைக் காட்டுகின்றன என்று அறிக்கை கூறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“