நிலவின் தென்துருவத்திற்கு அனுப்பபட்ட இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென்துருவத்திற்கு அருகில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கி பின் அதில் இருந்து பிரக்யான் ரோவர் வெளிவந்து நிலவில் வெற்றிகரமாக நகர்ந்து சென்று ஆய்வு செய்தது.
விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தும், பிரக்யான் ரோவர் நகர்ந்து சென்றும் ஆய்வு செய்து தகவல்களை பூமிக்கு அனுப்பியது. ஒரு சந்திர நாள் (பூமியில் 14 நாட்கள்) ஆய்வுகளை மேற்கொண்டது. நிலவின் வெப்பநிலை, தனிமங்கள் உள்ளிட்ட பல்வேறு ரகசியங்களை கண்டறிந்து உலகிற்கு சொல்லியது.
தொடர்ந்து நிலவில் இரவு தொடங்கிய நிலையில் கருவிகளை மீண்டும் செயல்பட வைக்கும் வகையில், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் உறக்க நிலைக்கு மாற்றப்பட்டது. முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு உறக்க நிலைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் நிலவில் மீண்டும் பகல் நேரம் தொடங்கி உள்ள நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் லேண்டர் மற்றும் ரோவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். இருப்பினும் தற்போது வரை சிக்னல் கிடைக்கவில்லை.
மறுபுறம், அமெரிக்க ராக்கெட் ஒன்று பூமியின் வளிமண்டலத்தில் மோதி துளை ஏற்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெக்சாஸை தளமாகக் கொண்ட தனியார் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான Firefly Aerospace செப்டம்பர் 14 அன்று அமெரிக்க விண்வெளிப் படையின் Victus Nox செயற்கைக்கோளை சுமந்து சென்றது.
அப்போது ஒரு பிரகாசமான வெளியேற்றக் கூம்பு வானத்தின் ஒரு பெரிய பகுதியில் விரிவடைந்தது என்று Spaceweather.com தெரிவித்தது. இந்த கூம்பு மறைந்த பிறகும், சிறிய சிவப்பு பின்னொளி இருந்தது, இது அயனோஸ்பியரில் ராக்கெட் துளை ஏற்படுத்தியதால் இருக்கலாம் என அது கூறியது. இது என்ன விளைவை ஏற்படுத்தும்?
அயனோஸ்பியரின் கலவை மற்றும் அடர்த்தியில் ஏற்படும் மாற்றங்கள் இரண்டு நிகழ்வுகளிலும் சமிக்ஞைகளை சீர்குலைக்கலாம்.
சிவப்பு வெளிச்சத்தை தவிர இது போன்ற துளைகள் குறைந்த அதிர்வெண் கொண்ட ரேடியோ தகவல் தொடர்புகளை பாதிக்கலாம் மற்றும் ஜி.பி.எஸ் அமைப்புகளில் கோளாறுகளை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விளைவுகள் பொதுவாக தற்காலிகமானவை, ஏனெனில் சூரியன் மீண்டும் உதயமான பிறகு ரீயோனைசேஷன் மீண்டும் தொடங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“