சந்திரயான் 3 விண்கலம் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கி அதன் பின் பிரக்யான் ரோவரும் வெளி வந்து நிலவில் ஆய்வு செய்தது.
விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தும் பிரக்யான் ரோவர் நிலவில் ஊர்ந்து சென்றும் ஆய்வு செய்தன. நிலவின் வெப்பநிலை, தனிமங்கள், ஆக்சிஜன், சல்ஃபர் இருப்பு பேன்றவைகளை ஆய்வு செய்து விண்கலம் தரவுகளை அனுப்பியது.
இந்த நிலையில், செப்டம்பர் 22 அன்று, ஒரு புதிய சந்திர நாள் தொடங்கிய பிறகு, விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், லேண்டர் அல்லது ரோவரில் இருந்து எந்த சமிக்ஞையும் பெறப்படவில்லை. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் (பூமியில் சுமார் 14 நாள்களுக்கு) ஒரு முழு சந்திர நாளில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தற்போது விக்ரம் மற்றும் பிரக்யான் செயலிழந்து காணப்படுகிறது. நிலவின் மேல் உள்ளது. இதன் மேல் விண்கற்கள், தூசிகள் மோதும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனினும் தற்போது இதுபோன்ற அசம்பாவிதங்கள் உடனே ஏற்படவும் வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“