சாட் ஜி.பி.டி ஏ.ஐ தொழில்நுட்பம் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. கடந்தாண்டு ஓபன் ஏ.ஐ நிறுவனத்தால் சாட் ஜி.பி.டி அறிமுகம் செய்யப்பட்டது. செயற்கை நுண்ணறிவு அம்சமான இது அனைத்து துறை வேலைகளையும் செய்கிறது. இதனால் உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றது.
வெப் வெர்ஷனாக மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட சாட் ஜி.பி.டி அண்மையில் ஆப்பிள் மொபைல்களில் செயலியாக அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது ஆண்ட்ராய்டு போன்களிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சாட் ஜி.பி.டி ஆண்ட்ராய்டு வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா, பங்களாதேஷ், அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் சாட் ஜி.பி.டி ஆண்ட்ராய்டு வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.
சாட் ஜி.பி.டி ஆண்ட்ராய்டு வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இது மில்லியன் கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு உதவியாக இருக்கும் என்று ஓபன் ஏ.ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் செயலியை இலவசமாக டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“