மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஓபன் ஏ.ஐ நிறுவனம் வாட்ஸ்அப்பிலும் சாட்ஜி.பி.டி சாட்போட் மற்றும் சாட்ஜி.பி.டி காலிங் வசதி அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய வசதிகள் ‘12 நாட்கள் ஓபன்ஏ.ஐ’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ளது. எனினும் காலிங் வசதி அமெரிக்காவில் மட்டுமே உள்ளது. ஆனால் சாட்போட் வசதி சாட்ஜி.பி.டி உள்ள அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்பில் சாட்ஜி.பி.டி சாட்போட் எப்படி பயன்படுத்துவது?
1. முதலில் உங்கள் போனில் சாட்ஜி.பி.டி என பெயரிட்டு இந்த எண்ணை +18002428478 என்ற பதிவு செய்யவும்.
2. அதன் பின் சாட்ஜி.பி.டி என வாட்ஸ்அப் பக்கத்தில் தேடவும். இப்போது இந்த எண்ணிற்கு பின் ஷேட் பக்கத்தில் ப்ளூ டிக் உள்ளதாக என்பதை உறுதி செய்யவும்.
3. இப்போது ஷேட் உள்ளே சென்று எப்போதும் போல் கேள்வி எழுப்பி பதில்களை பெற்றுக் கொள்ளலாம்.
இதே போல் அமெரிக்க பயனர்கள் சாட்போட் வசதியுடன் காலிங் வசதியை பெறுவார்கள். வாட்ஸ்அப் எண்ணில் கால் செய்து 15 நிமிடங்கள் வரை உரையாடல் நிகழ்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“