New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/New-Project5-1.jpg)
Chat GPT Android version
OpenAI ChatGPT: ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு குட் நியூஸ். ஓபன் ஏ.ஐ விரைவில் சாட் ஜி.பி.டி ஆண்ட்ராய்டு வெர்ஷன் அறிமுகப்படுத்த உள்ளது.
Chat GPT Android version
ஓபன் ஏ.ஐ நிறுவனத்தால் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப் பட்ட சாட் ஜி.பி.டி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அனைத்து துறைகளிலும் வேலை செய்கிறது. இந்நிலையில் வெப் சைட் வெர்ஷன் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட சாட் ஜி.பி.டி இந்தாண்டு மே மாதம் பிரத்யேகமாக ஆப்பிள் iOS செயலியாக அறிமுகப்படுத்தப்பட்டது.
iOS பயன்பாடு அமோக வரவேற்பு பெற்றது. இருப்பினும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட வில்லை. இந்நிலையில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஓர் நற்செய்தியாக சாட் ஜி.பி.டி ஆண்ட்ராய்டு வெர்ஷனில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு வெர்ஷன் தயாராக இருப்பதாகவும், விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு வெர்ஷன் சமீபத்திய அப்டேட்களை கொண்டிருக்கும் என்றும் மில்லியன் கணக்கான பயனர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓபன் ஏ.ஐ நிறுவனம் ஆண்ட்ராய்டு வெர்ஷன் அறிமுகம் குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு செயலி அடுத்த வாரம் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். இன்று முதல் கூகுள் பிளே ஸ்டோரில் ப்ரீ- ஆர்டர் செய்து கொள்ளலாம் எனவும் OpenAI தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.