ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் ஏ.ஐ சாட்போட் மூலம் இயங்கும் சாட் ஜி.பி.டி தற்போது புதிய வசதிகளை பெற்று வருகிறது. சாட் ஜி.பி.டி பேஸிக் வெர்ஷன் இலவசமாகவும் சாட் ஜி.பி.டி 3.5 மற்றும் 4 போன்ற வெர்ஷனுக்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் வாய்ஸ் ஷேட் மற்றும் இமெஜ் ரெகக்னிசன் ஆகிய 2 வசதிகள் தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வாய்ஸ் ஷேட் மூலம் ப்ராம்ட்டை நீங்கள் ஏ.ஐயிடம் தெரிவிக்கலாம். அதாவது நீங்கள் டைப் செய்வதற்குப் பதிலாக பேசி உங்களுக்கு தேவையானவற்றைப் பெறலாம்.
எப்படி பயன்படுத்துவது?
உங்கள் போனில் சாட் ஜி.பி.டி ஓபன் செய்து செட்டிங்ஸ் பக்கம் செல்லவும். அங்கு நியூ Features ஆப்ஷன் இருக்கும். அதில் enable voice chat என்பதை என்பதை கிளிக் செய்து பயன்படுத்தலாம். எனினும் சைபர் குற்றங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க இந்த அம்சத்தின் பாதுகாப்பை நிறுவனம் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
இமெஜ் ரெகக்னிசன் வசதி
இமெஜ் ரெகக்னிசன் வசதி (Image recognition features) பயன்படுத்தி நீங்கள் போட்டோ அப்லோடு செய்து அது தொடர்பான உதவிகளைப் பெறலாம். போட்டோ கேப்சன், போட்டோ குறித்தான பின்னணி விவரம் ஆகியவை பெறலாம்.
எப்படி பயன்படுத்துவது?
சாட் ஜி.பி.டி மொபைல் ஆப் சென்று அதில் கொடுக்கப்பட்டிருக்கும் '+' ஐகானை கிளிக் செய்து போட்டோ எடுத்தோ அல்லது அப்லோடு செய்தோ பயன்படுத்தலாம். சாட் ஜி.பி.டி 3.5,4 மற்றும் சாட் ஜி.பி.டி பிளஸ் ஆகிய வெர்ஷனில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்தியாவில் சாட் ஜி.பி.டி பிளஸ் வெர்ஷனில் அடுத்த சில நாட்களில் அறிமுகம் ஆகிறது. சாட் ஜி.பி.டி பிளஸ் வெர்ஷன் ரூ.1600 மாத கட்டணம் செலுத்தி பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“