30 நாட்கள் குறைந்த விலை டேட்டா பிளான்: ஏர்டெல் vs வி.ஐ vs ஜியோ; எது பெஸ்ட்?

ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜியோ என 3 நிறுவனங்களும் ரூ.296 என்ற ஒரே விலையில் 30 நாட்கள் வேலிடிட்டி உடன் திட்டங்களை வழங்குகிறது. இதில் எது சிறந்தது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜியோ என 3 நிறுவனங்களும் ரூ.296 என்ற ஒரே விலையில் 30 நாட்கள் வேலிடிட்டி உடன் திட்டங்களை வழங்குகிறது. இதில் எது சிறந்தது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Airtel-vs-Jio-vs-Vodafone-Idea

Airtel-vs-Jio-vs-Vodafone-Idea

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியவை இந்தியாவில் உள்ள முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களாகும். இவை இந்தியா முழுவதும் தொலைத் தொடர்பு சேவை வழங்கி வருகின்றன. பயனர்களின் வசதிக்கு ஏற்ப 3 நிறுவனங்களும் ப்ரீபெயட், போஸ்ட்பெஸ்ட் என்ற முறையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன. இந்நிலையில் ரூ.296 என்ற ஒரே விலையில் ஜியோ, ஏர்டெல், வி.ஐ மூன்றும் வெவ்வேறு சலுகைகளுடன் திட்டத்தை வழங்குகிறது. இதில் எது சிறந்தது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.296 திட்டம்

Advertisment

முழுமையாக 30 நாட்கள் வேலிடிட்டி உடன் ரூ.296 திட்டம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் 25ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் மற்றும் அன்லிமிடெட் காலிங் வசதியை வழங்குகிறது. அதோடு அமேசான் ப்ரைம் வீடியோ மொபைல் எடிஷன் 30 நாள் நாட்கள் இலவசம், FASTag-ல் ரூ. 100 கேஷ்பேக், 3 மாதங்களுக்கு அப்பல்லோ 24/7 பயன்பாடு ஷா அகாடமி வகுப்பு, ஏர்டெல் வின்க் மியூசிக் மற்றும் ஹலோ ட்யூன்ஸ் சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

வி.ஐ ரூ.296 திட்டம்

வி.ஐ தனது ரூ.296 திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. வி.ஐ-ன் இந்த திட்டத்தில் 30 நாட்கள் 25GB டேட்டா தினசரி பயன்பாட்டு உச்ச வரம்பு இல்லாமல் வழங்குகிறது. அதன்பின் ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். ஆபரேட்டர் எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் கால் செய்யலாம். ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படும். ஜியோ மற்றும் ஏர்டெல் போன்று, வார இறுதி டேட்டா ரோல்ஓவர், அன்லிமிடெட் நைட் டேட்டா போன்ற கூடுதல் பலன்கள் இதில் கிடையாது. வி.ஐ மியூசிக், டிவி பயன்பாட்டை இலவசமாக பெறலாம். ஓ.டி.டி பலன்கள் ஏதும் இதில் இல்லை.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.296 திட்டத்தில் 25 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தில் கடந்த ஆண்டை விட விலை 40 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்துடன் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் போன்றவற்றிற்கான அணுகலை பெறலாம். ஜியோ 25 ஜிபிக்கு மேலான டேட்டா பயன்பாட்டிற்கு எந்த கட்டணமும் விதிக்காது. ஆனால் வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

எது பெஸ்ட்?

Advertisment
Advertisements

அனைத்து திட்டத்திலும் ஒரே மாதிரியான டேட்டா பேக் வழங்குகின்றன. அதோடு சில சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஏர்டெல் தனது திட்டத்தில் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் படி FASTag, Apollo Circle மற்றும் Wynk Music பலன்களை வழங்குகிறது. ஜியோ நிறுவனம் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா என பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குகிறது. ஆனால் வி.ஐ இந்த பலன்களை தரவில்லை. எனவே, ரூ.296 30 நாட்கள் வேலிடிட்டி திட்டத்திற்கு ஏர்டெல் மற்றும் ஜியோ உதவியாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jio Recharge Plan Vodafone Airtel

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: