பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப்பில் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை படித்திட பல மூன்றாம் தரப்பு செயலிகள் உள்ளன. ஆனால், அவை வாட்ஸ்அப் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, இச்செயலிகளை பயன்படுத்துவதால் வாட்ஸ்அப்பின் தனிப்பட்ட தகவல்கள் திருடு போவதற்கான வாய்ப்புகள் அதிகம் என பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவதில்லை.
அதே சமயம், உங்களிடம் புதிதாக அறிமுகமான ஒன்பிளஸ் அல்லது ரியல்மி மொபைல் இருந்தால், அதிலிருக்கும் Notification History அம்சம் மூலமாகவே, எளிதாக டெலிட் மெசேஜ்களை படித்திட முடியும். மூன்றாம் தரப்பு செயலி தேவைப்படாது.
Notification History என்றால் என்ன?
நோட்டிஃபிகேஷன் ஹிஸ்டரி சாப்ட்வேரை, கஸ்டம் ஸ்கீன்களான OxygenOS, Realme UI போன்றவற்றில் காணமுடியும். அந்த அம்சத்தில், உங்கள் மொபைலுக்கு வரும் அனைத்து நோட்டிஃபிகேஷன்களும் சேமிக்கப்பட்டு இருக்கும். இந்த அம்சம் , நீங்கள் தவறுதலாக படிக்காமல் ஸ்வைப் செய்த நோட்டிஃபிகேஷனை படித்திட உதவியாக இருக்கும். ஆனால், இந்த ட்ரிக் பயன்படுத்தி, டெலிட் மெசேஜூம் படித்துக்கொள்ளலாம்.
எப்படி படிப்பது?
புதிய ஒன்பிளஸ் அல்லது ரியல்மி சாதனங்கள் வைத்திருந்தால், முதலில் Setting-க்கு செல்ல வேண்டும். அங்கு சேர்ச் பாரில், Notification History என டைப் செய்ய வேண்டும். தொடர்ந்து, திரையில் வரும் Notification History அம்சத்தை கிளிக் செய்து, Enable கொடுக்க வேண்டும்.
அதன் பிறகு, நீங்கள் மொபைல் எடுக்கையில், உங்கள் நோட்டிஃபிகேஷனில் This message was deleted என இருந்தால், எவ்வித கவலையும் இன்றி கடைசி நோட்டிஃபிகேஷனுக்கு கீழே உள்ள History பட்டனை கிளிக் செய்தால் போதும். அதில், உங்களுக்கு வந்த அனைத்து நோட்டிஃபிகேஷன்களும் இடம்பெற்றிருக்கும். டெலிட் செய்த மெசேஜ்களையும் காண முடியும்.
குறிப்பு: இந்த அம்சம் ஆன் செய்த பிறகு வரும் நோட்டிஃபிகேஷன்களை மட்டுமே காண முடியும். இல்லையெனில், அவற்றை காண இயலாது.
எப்படி வேலைசெய்கிறது?
இந்த நோட்டிஃபிகேஷன் ஹிஸ்டரியில் அனைத்து விதமான நோட்டிஃபிகேஷன்களும் அதிலிருக்கும் தகவல்களும் இடம்பெற்றிருக்கும். எனவே, உங்கள் மெசேஜ் அனுப்பி டெலிட் செய்திருந்தாலும், இந்த அம்சம் ஏற்கனவே அந்த மெசேஜின் கன்டன்டை செவ் செய்து வைத்திருக்கும்.
ஒருவேளை உங்களிடம் ரியல்மி அல்லது ஒன்பிளஸ் மொபைல் இல்லாத பட்சத்தில், நீங்கள் இந்த லிங்கின் Click here Step-களை பின்பற்றி டெலிட் மெசேஜ்களை படிக்க முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.