சென்னையை தளமாகக் கொண்ட விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனம் 26.7 மில்லியன் டாலர்களை சீரிஸ்-பியில் நிதியில் திரட்டியுள்ளதாக செவ்வாய்க் கிழமை அறிவித்தது. நிறுவனம் சொந்தமாக ராக்கெட் மற்றும் 3D-அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக மொத்தம் 40 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.
நிறுவனம் அக்னிபான் (Agnibaan) என்ற ராக்கெட்டை உருவாக்கி வருகிறது. இது சிறிய அளவிலான செயற்கைக் கோள்கள் அதாவது மொத்தம் 100 கிலோ கிராம் எடையுள்ள பேலோடுகளை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இது அக்னிலெட் என்படும் "செமி கிரையோஜெனிக்" ராக்கெட் எஞ்சின் மூலம் இயக்கப்படும். ராக்கெட் எஞ்சின் ரூப் வெப்ப நிலை கொண்ட திரவ மண்ணெண்ணெய் மற்றும் திரவ ஆக்ஸிஜன் கலவையால் இயக்கப்படுகிறது.
அக்னிகுல் தனது அக்னிபான் எஸ்.ஓ.ஆர்.டெட் (சப்ஆர்பிடல் டெக்னாலஜிகல் டெமான்ஸ்ட்ரேட்டர்)க்கான ஒருங்கிணைப்பு செயல்முறையை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் (SDSC) உள்ள நிறுவனத்தின் மையத்தில் ஒருங்கிணைப்பு செயல்முறை நடக்கிறது.
அக்னிகுல் ஏவுதளம் மற்றும் மிஷன் கட்டுப்பாட்டு அறை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மைய வளாகத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளம் ஆகும். இதனை கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் சோமநாத் திறந்து வைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“