ஆப்பிள் 2018 டெவலப்பர் நிகழ்வு: ரஜினிகாந்த் டி- ஷர்ட்டை அணிந்து கொண்டு நின்ற சென்னை இளைஞர்!

விருது எல்லாம் கிடைக்கும் என்று சிந்திக்க கூட இல்லை. எனது சொந்த ஊர் தேனி

ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர் நிகழ்வில் ரஜினிகாந்தின் ஃபோட்டோ பொருத்திய டி- ஷர்ட்டை அணிந்துக் கொண்ட விருது வாங்கிய தமிழக இளைஞர் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தின் 2018 டெவலப்பர் நிகழ்வு கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் நகரில் துவங்கியது. ஐஓஎஸ் 12 துவங்கி, வாட்ச் ஓஎஸ், டிவி ஓஎஸ், மேக் ஓஎஸ் என ஆப்பிள் சாதனங்களுக்கான இயங்குதளங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் நிறுவன மென்பொருள் பொறியியல் துறைக்கான மூத்த துணை தலைவர் க்ரியாக் ஃபெட்ரிகி ஐஓஎஸ் 12 இயங்குதளத்தை அறிமுகம் செய்த டெவலப்பர் நிகழ்வை துவங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, டெவலப்பர்கள், டிசைனர்கள் , தொழில்நுட்ப கலைஞர்கள் சிலருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது தான் தேனியை சேர்ந்த ராஜா விஜயராம் என்ற இளைஞர் மேடைக்கு அழைக்கப்பட்டார்.

கண்ணில் ஆச்சரியத்துடன், என்னை தான் அழைத்தார்களா? என்ற சந்தேகத்துடன் மேடை ஏறிய ராஜாவிற்கு அந்த மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருந்தது. இந்த ஆண்டிற்கான ’ஆப்பிள் டிசனைர் விருது ’ ராஜாவிற்கு வழங்கப்பட்டது. சென்னையில் இருந்து ஆப்பிள் டெவலப்பர் 2018 நிகழ்வில் புறப்பட்டு செல்லும் போது ராஜா தனக்கு இப்படி ஒரு விருது கிடைக்கும் என்று சற்றும் நினைத்திருக்க மாட்டார்.

WWDC 2018

WWDC 2018

ராஜா டிசைன் செய்த Calzy (calculator app)  தான் அவரை இந்த விருதுக்கு உரியவராக மாற்றியுள்ளது. ஒரு நேர்த்தியான கால்குலேட்டர் மட்டுமில்லை வடிவத்திலும், பயன்பாட்டிலும் ராஜாவின் Calzy அனைவரையும் வியக்க வைத்த ஆப் தான். தனது பெயரை அழைத்த உடன் மகிழ்ச்சியாக மேடை ஏறிய ராஜா,சூப்பட் ஸ்டார் ரஜினிகாந்த் புகைப்படம் பொருந்திய டி- ஷர்ட்டில் அனைவரையும் உற்று கவனிக்க வைத்தார்.

மேடையில் ராஜா பேசியது, “ என்னால் இதை சற்றும் நம்ப முடியவில்லை . நான் WWDC 2018 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள அழைக்கப்பட்ட போது விருது எல்லாம் கிடைக்கும் என்று சிந்திக்க கூட இல்லை. எனது சொந்த ஊர் தேனி. மெக்கானிக்கல் என்ஜீனியர் படித்து விட்டு வேலை தேடி சென்னைக்கு வந்தேன்.கிராஃபிக்ஸ் டிசைனும் கற்றுக் கொண்டேன். கூடவே, சில திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளேன். நான் என் முதல் ஐபோனை வாங்கி பயன்படுத்தும் போது Calzy செயலில் வடிவமைப்பு பற்றி யோசித்தேன்.

raja vijayaram

raja vijayaram

நான் வடிவமைத்த கால்குலேட்டர்  மக்களை இவ்வளவு  எளிதாக கவரும் என்று கனவிலும் நினைத்ததில்லை. சாதரண கால்குலேட்டரில் 3D எஃபக்டெட்ஸ் எல்லாம் புகுத்தி புதுவிதமாக மக்களை கால்குலேட்டர் பயன்படுத்த வைக்க நினைத்தேன்” என்று கூறியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் Calzy app , ஆப்பிள் பிளே ஸ்டோரில் இடம் பெற்று வருகிறது. இது ஒரு ஐஒஎஸ் ஆப் என்பதால் ஐபோன் யூசர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும்.இதன் விலை ரூ. 159 ஆகும். இந்த கால்குலேட்டரில் அதிகப்படியான அம்சங்களை புகுத்த கோரிக்கை எழுந்த போதும் அது எளிமையாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் ராஜா இந்த  Calzy – யை   வடிவமைத்திருப்பது அனைவரையும் கவனிக்க வைத்த ஒன்று.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close