scorecardresearch

3-டி பிரின்டிங் மூலம் ராக்கெட்: சென்னை ஐ.ஐ.டி., சாதனை

இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே தொழில்நுட்பத்தில், 3-டி பிரின்டிங் மூலம் ராக்கெட்டிற்கான இயந்திரங்கள் தயாரிப்பது இதுவே முதல் முறை.

3-டி பிரின்டிங் மூலம் ராக்கெட்: சென்னை ஐ.ஐ.டி., சாதனை

இந்தியாவின் சார்பாக குறைந்த விலையில் விண்ணில் ராக்கெட்டுகள் அனுப்ப, வல்லரசு நாடுகளுடன் போட்டியிடுகிறது. ஒருசில நாடுகள் இதற்காக இந்தியாவை நாடுகிறது.

இதனால், ராக்கெட் ஏவும் செலவை குறைக்கும் வகையில், இந்திய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கிய எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது. இதனிடையே, சர்வதேச நாடுகள் வியக்கும் வகையில், சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கிய அக்னிகுள் ராக்கெட் தற்போது தயாராகியுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி., தயாரித்த இந்த ராக்கெட் 3-டி பிரிண்ட் மூலம் தயாரிக்கப்பட்டது. இந்த ராக்கெட் வாயிலாக, குறுகிய புவிவட்ட பாதைக்கு செயற்கைகோள்களை அனுப்பலாம் என்றும், இதற்கான இயந்திரத்தை விரைந்து தயாரிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

72 மணி நேரத்திற்குள் ராக்கெட்டிற்கு தேவையான நான்கு இயந்திரங்களை உருவாக்கிவிட முடியும் என்று ஐஐடி இயக்குனர் காமகோடி கூறுகிறார்.

“இரண்டில் இருந்து மூன்று வாரத்திற்குள் எங்களால் ராக்கெட்டை உருவாக்கிவிட முடியும். உபேர், ஓலா போன்ற சேவைகள் போல இந்த ராக்கெட் வசதியை அனுப்பலாம்”, என்று 3-டி பிரின்டிங் இன்ஜினியர் தினேஷ் கூறுகிறார்.

மேலும், இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே தொழில்நுட்பத்தில், 3-டி பிரின்டிங் மூலம் ராக்கெட்டிற்கான இயந்திரங்கள் தயாரிப்பது இதுவே முதல் முறை என்று தினேஷ் கூறுகிறார்.

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Chennai iit created first rocket made out using 3d printing technology

Best of Express